பழமையான உழக்கரிசி பிள்ளையார் கோயில்
அம்பலவாண புரம் என்னும் இடத்தில் கருணை பிள்ளையார் என்ற உழக்கரிசி பிள்ளையார் உள்ளார். இந்தப் பிள்ளையார் மிகவும் விசேஷமானவர். தென் திசையைச் சிவன் சக்தி திருமணத்தின் போது சமன் செய்யப் பொதிகை மலை வந்தார் அகத்தியர். அப்போது பல தெய்வங்களை இந்த பகுதியில் பிரதிட்சை செய்து வணங்கினார்.
அதுபோலவே அகத்தியர் வணங்கிய பிள்ளையார் தான் அம்பலவணாபுரம் உழக்கரிசி பிள்ளையார். காலங்கள் கடந்தது. இந்தப் பிள்ளையார் இருந்த இடத்தினை யாரும் கவனிக்காமல் விட்டு விட்டனர். இதனால் அவர் இருக்கும் இடம் தெரியாமல் போய்விட்டார். 18 ஆம் நூற்றாண்டில் பிரிட்டிஷ் ஆட்சியின் போது இப்பகுதியில் ஒரு ஆங்கிலேயர் துரை வேட்டையாட வந்தார்.
அவர் இவ்வழியாக வரும் போது வெள்ளத்துரையின் குதிரை கால் பட்டு மீண்டும் வெளிப்பட்டார் உழக்கரிசி பிள்ளையார். அப்போ து குதிரையில் குழம்பிடப் பட்டு பிள்ளையார் மீது ரத்தம் பீரிட்டது. இதைக் கண்ட வெள்ளயன் அரண்டு போய் விட்டான். உடனே அங்கிருந்து மக்களிடம் இந்த பிள்ளையாரை நீங்கள் வைத்து வணங்குங்கள். நான் அதற்கு உதவி புரிகிறேன் என்று கூ றினார். மக்கள் சரியென்று அந்த பிள்ளையாரை மீண்டும் பிரதிட்டை செய்து வணங்க ஆரம்பித்தனர்.
அந்த வெள்ளைத்துரை இப்பிள்ளையாருக்கு மானியமாகத் தினமும் உழக்கு அரிசி கொடுத்தார். ஆகவே இந்த பிள்ளையாருக்கு உழக்கரிசி பிள்ளையார் என்று பெயர் வந்தது. மேலும் இவரை வணங்கும் போது மிகக் கருணையாய் பக்தருக்கு அருளினார் . ஆகவே அவருக்குக் கருணை பிள்ளையார் என்ற பெயரும் வந்தது.
இந்தக்கோவில் 120 வருடம் பழமையானவை. முற்காலத்தில் அகத்தியர், சிவன், சக்தி திருமணக்காட்சியை காண இங்கு வந்த போது அகத்தியர் வைத்து வணங்கிய பிள்ளையார்களில் உழக்கரிசி பிள்ளையாரும், நெல்லை சந்தி பிள்ளையாரும் அடங்குவர்.
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகில் இவ்வூர் உள்ளது.