உத்தரகாண்ட்:

மயலை அடிவாரத்தில் உள்ள சிவன் ஸ்தலமான கேதர்நாத் கோவில் இன்று காலை  6.10 மணிக்கு திறக்கப்பட்டது. ஆனால், கொரோனா பரவல் காரணமாக யாத்ரிகர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது.

இந்துக்களின் முக்கிய யாத்திரைத் தளமானதும், சிவஸ்தலங்களில் முக்கியமானதுமான கேதார்நாத் கோவில், உத்தரகாண்ட் மாநிலம் ருத்ரபிரயாக் மாவட்டத்தில்  கடல் மட்டத்தில் இருந்து 11,755 அடி உயரத்தில் இமயமலையில் அமைந்து உள்ளது .

இந்த கோவில் குளிர்காலங்களில் சுமார் 6 மாதங்கள்  மூடப்பட்டு இருக்கும். தற்போது வெயில் காலம் என்பதால், கோவில் நடை திறக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அடுத்த 6 மாத காலம் கோவில் நடை திறந்திருக்கும். இதையொட்டி  கோவில் நடை மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

இன்று அதிகாலை சுமார் 6 மணி அளவில்,வேத விற்பன்னர்கள்  வேத மந்திரங்கள் முழங்க  கோவிலின் திறக்கப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இந்த பூசையில் கோவில் பூசாரி உள்பட  16 பேர் மட்டுமே பூஜையில் கலந்து கொண்டனர். இதனுடன், சமூக விலகலும் கடைபிடிக்கப்பட்டது

கொரோனா தொற்று பரவல் காரணமாக கேதர்நாத் கோவிலுக்கு இந்த ஆண்டு பக்தர்கள் வர மத்திய அரசு தடை விதித்துள்ளது.

[youtube-feed feed=1]