பரேலி:

ன்று அதிகாலை நடைபெற்ற கார் விபத்தில்  உத்தரகாண்ட் மாநில அமைச்சர் மகன் உள்பட 3 பேர் பலியாகினர். இது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

உத்தரகண்ட் மாநில அரசின் அமைச்சராக இருந்து வருபவர்  அரவிந்த் பாண்டே. இவரது மகன்  ஆங்கூர் பாண்டே உள்பட 4 பேர்   சென்ற கார் இன்று அதிகாலை உத்தரபிரதேசத்தின் பரேலி மாவட்டத்தில் உள்ள ஃபரித்பூர் அருகே விபத்தில் சிக்கியது. இதில், 3 பேர் பரிதாபமாக இறந்தனர்.

கார் இன்று அதிகாலை 3 மணி அளவில் உ.பி. மாநிலம் பரேலி மாவட்டத்தில்  ஃபரித்பூர் அருகே என்.எச் 24 சாலையில் சென்றுகொண்டிருந்த பொழுது, எதிர்பாராதவதமாக எதிரே வந்த திடீரென லாரி மீது மோதியது.

இந்த விபத்தில் ரவிந்த் பாண்டேவின் மகன் அங்கூர் பாண்டே சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.  அவருடன் பயணித்த இரண்டு பேர் இறந்தனர், ஒருவர் காயமடைந்துள்ள நிலையில் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விசாரணையில் அமைச்சரின் மகன்  திருமணத்தில் கலந்து கொள்ள கோரக்பூருக்கு சென்று கொண்டிருந்தபோது  விபத்தில் சிக்கி மரணம் அடைந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.