உத்தரகண்ட்: உத்தரகண்ட் முதலமைச்சர் திரிவேந்திர சிங் ராவத்திற்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் இன்னமும் கொரோனாவின் தாக்கம் ஓயவில்லை. ஆளுநர்கள், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், மருத்துவர்கள் என அனைத்து தரப்பினரையும் கடுமையாக பாதித்து வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு தரப்பிலும் கடுமையான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.

உத்தரகண்ட் மாநில ஆளுநர் பேபி ராணி மௌரியா அண்மையில் தான் கொரோனா பாதிக்கப்பட்டு அதில் இருந்து மீண்டார். இந் நிலையில், உத்தரகண்ட் முதலமைச்சர் திரிவேந்திர சிங் ராவத்திற்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த விவரத்தை அவர் தமது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார். தமக்கு அறிகுறியற்ற கொரோனா தொற்று உள்ளதாகவும், தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் உள்ளதாகவும் அவர் கூறி உள்ளார். தம்முடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளார்.

[youtube-feed feed=1]