டேராடூன்

த்தரகாண்ட் பாஜக முதல்வர் தீரத் சிங் ராவத் பெண்கள் உடை குறித்து இழிவாக பேசியதால் கடும்  சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

பாஜகவினர் தொடர்ந்து நாகரீகமாக உள்ள பெண்கள் குறித்து தவறான முறையில் விமர்சித்து சர்ச்சையில் சிக்கிக் கொள்வது வழக்கமாக உள்ளது.   பல நேரங்களில் இவர்கள் தாங்கள் மட்டுமே சமுக காவலர்கள் என்பது போல் பேசுவதாகப் பலரும் கருதுகின்றனர்.   இந்நிலையில் உத்தரகாண்ட் முதல்வர் தீரத் சிங் ராவத் பெண்கள் உடை குறித்துப் பேசியதற்கு கடும் கண்டனம் எழுந்துள்ளது.

ஒரு நிகழ்வில் தீரத் சிங் ராவத், “தற்போது இளம் தலைமுறையினர் நாகரிகம் என்ற பெயரில் ஏதேதோ ஆடைகளை அணிகின்றனர்.  ஒரு. சில பெண்களும் அதையே பின்பற்றிக் கிழிந்து போன ஜீன்ஸ் அணிகின்றனர்..  சமீபத்தில் விமானத்தில் எனக்கு அருகில் அமர்ந்திருந்த பெண் கை நிறைய வளையல், முழங்காலில் கிழிந்த ஜீன்ஸ், பூட்ஸ் அணிந்திருந்தார்.

அந்த பெண்ணுக்கு இரண்டு சிறு குழந்தைகளும் இருந்தனர்.  அவர் ஏதோ தன்னார்வ தொண்டு நிறுவனம் நடத்துவதாகச் சொன்னார். அந்த கிழிந்த ஜீன்ஸ் அணிந்த ஒரு  பெண்ணால் சமூகத்தில் என்ன மாதிரியான நல்ல தாக்கத்தை ஏற்படுத்த முடியும்?” எனப் பேசி உள்ளார்.   இந்த உரை தேசிய அளவில் கடும் சர்ச்சையை உண்டாக்கி இருக்கிறது.

இது குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல் இந்த பேச்சால் தாம் அதிர்ச்சி அடைந்துள்ளதாகக் கூறி உள்ளார்.  அம்மாநில காங்கிரஸ் தலைவர் பிரீதம் சிங் முதல்வரின் பேச்சு அவமானகரமானது எனவும் இதற்காக அவர் பெண்களிடம் மன்னிப்பு கோர வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். மேலும் ஆம் ஆத்மி கட்சி மற்றும் சமாஜ்வாடிகட்சியும் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

காங்கிரஸ் பொதுச் செயலர் பிரியங்கா காந்தி வதேரா இதற்கு கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளார்.  அவர் தனது டிவிட்டரில் உத்தரகாண்ட முதல்வர் பேச்சைக் கடுமையாக விமர்சித்துள்ளார்.  அத்துடன் அந்த பதிவில் ஆர் எஸ் எஸ் தலைவர்கள் புகைப்படங்களைப்  பகிர்ந்து, “அட கடவுளே இவர்களின் முழங்கால்கள் எல்லாம் தெரிகிறதே” எனப் பதிந்துள்ளார்.