டேராடூன்:
உத்தரகண்ட்டில் பஸ் கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 25 ஆக அதிகரித்துள்ளது.

பவுரி கர்வால் பகுதியில் நேற்று(அக்., 04) இரவு திருமண விழாவிற்காக 46 பேருடன் சென்ற பஸ், பள்ளத்தாக்கில் திடீரென கவிழ்ந்தது. தகவல் அறிந்த போலீசார் மற்றும் மீட்பு படையினர் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

அதில் 25 பேர் உயிரிழந்த நிலையில் 21 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் உயிரிழப்பு அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக அஞ்சப்படுகிறது.
Patrikai.com official YouTube Channel