உத்தரகண்ட்: கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு உத்தரகண்ட் அரசு தடை விதித்தது.
அம்மாநிலத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் உயர்ந்து வருகிறது. அதன்காரணமாக பரவலை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இந் நிலையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக 2021ம் ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு மாநில அரசு தடை விதித்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
கொரோனா தொற்றை குறைக்கும் வகையில் ஜனவரி வரை இந்த தடை அமலில் இருக்கும். மதுபான விடுதிகள், உணவகங்களில் கிறிஸ்துமஸ் புத்தாண்டு தின கொண்டாட்டங்களை நடத்த கூடாது என்றும் உத்தரவிடப்பட்டு உள்ளது.