லக்னோ:

பெரும் பரபரப்பை ஏற்படுத்திய உன்னாவ் பாலியல் வன்கொடுமை வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட நபர்மீது, தற்போது புதிதாக கற்பழிப்பு புகார் கூறப்பட்டுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம், பாலியா மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஷாலினி (பெயர் மாற்றப்பட்டு உள்ளது).15 வயது மதிக்கத்தக்க இவர் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர். இந்நிலையில் கடந்த அக்டோபர் 16ம் தேதி ஷாலினியை அதே பகுதியைச் சேர்ந்த 5 பேர் கொண்ட கும்பல் டெல்லிக்குக் கடத்திச் சென்று கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அங்கிருந்து ஷாலினி கடந்த நவம்பர் 21ஆம் தேதி வீட்டிற்கு தப்பித்து வந்துள்ளார்.

இதனையடுத்து ஷாலினி நடந்ததைப் பெற்றோரிடம் தெரிவிக்கவே, அவர்கள் இதுகுறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குற்றம்சாட்டப்பட்ட ஐந்து பேரில் ஒருவரை மனியார் காவல்துறை யினர் கைது செய்துள்ளனர்.ஷாலினி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார்.

இந்த நிலையில், சிறுமியை வன்புணர்வு செய்த குற்றவாளிகள் பலர் ஜாமின் பெற்று வெளியே வந்த நிலையில்,  பாதிக்கப்பட்ட பெண் தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக பலமுறை புகார் அளித்திருந்தார்.

இதற்கிடையில், குற்றம் சாட்டப்பட்டவர், பாதிக்கப்பட்ட சிறுமியை முன்பு திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், தற்போது அவர் மீது, அந்தப் பெண் கற்பழிப்பு புகார் தெரிவித்துள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.