23வயது இளம்பெண் 5 பேரால் தீவைத்து எரிப்பு! உ.பி.யில் பரபரப்பு – வீடியோ

Must read

லக்னோ:

உ.பி.யில் 23 இளம்பெண்ணை  5பேர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு தீ வைத்துக்கொளுத்திய கொடுமை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

வடமாநிலங்களில் பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.  குறிப்பாக உ.பி. மாநிலத்தில் பாலியல்   வன்கொடுமைகள் தலைவிரித்து ஆடுகிறது. தினசரி 5 பெண்கள் பாதிப்புக்கு உள்ளாவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

கடநத  ஜனவரி மாதம் 1-ம் தேதி முதல் கடந்த மாதம் 15ம் தேதி வரை, 578 பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், உ.பி.யின் உன்னாவோவில் 23 வயதுடைய ஒரு பெண்ணை 5 ஆண்கள் சேர்ந்து பாலியல் வன்புணர்வு செய்து, தீ வைத்து எரித்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சுமார் 70 சதவிகிதம் தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட அந்த இளம்பெண் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த சம்பவம் அங்கு மீண்டும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது குற்றம் சாட்டப்பட்டு உள்ள நபரில் ஒருவர்,  அந்த பெண்ணை ஏற்கனவே கடந்த மார்ச் மாதம் பாலியல் வன்புணர்வு செய்த குற்றத்துக்காக கைது செய்யப்பட்டு ஜாமின் வந்த நிலையில், தற்போது இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.

இந்த வழக்கில் 3 பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட நிலையில், மற்றவர்கள் தலைமறைவாகி விட்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

More articles

Latest article