பிரக்யாராஜ்:  உ.பி. மாநிலத்தில் நடைபெற்று வரும் கும்பமேளா குறித்து தவறான தகவல்கள் மற்றும் வதந்திகளை  பரப்பியதற்காக 53 சமூக ஊடகக் கணக்குகள் முடக்கி மாநில பாஜக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.  இந்த சமூக ஊடகங்கள்  சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.

ஜனவரி 13, 2025 அன்று, உத்தரபிரதேச தீயணைப்புத் துறையால் நடத்தப்பட்ட வழக்கமான தீயணைப்புப் பயிற்சியை,இ  கும்பமேளாவில் நடந்த ஒரு உண்மையான தீ விபத்து என்று  சமுக வலைதளங்களில் வதந்திகளை பரப்பியத தொடர்பாக   53 சமூக ஊடக கணக்குகள் முடக்ககி, அவகைள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

பிரயாக்ராஜில் மகா கும்பமேளா விழா கடந்த மாதம் 13-ந் தேதி தொடங்கி நடந்து வருகிறது. இதுவரை 50 கோடிக்கும் மேற்பட்டோர் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி உள்ளனர்.  ர். இந்தநிலையில், மகா கும்பமேளா குறித்து தவறான தகவல்களை பரப்பியதாக 53 சமூக ஊடக கணக்குகளை முடக்கி போலீசார் சட்ட நடவடிக்கை எடுத்துள்ளனர். கும்பமேளாவில் கூட்ட நெரிசல், தீ விபத்து என பழைய வீடியோக்களை வெளியிட்டு தவறான தகவலை பரப்பி பதற்றம் ஏற்படுத்திய பல சமூக ஊடக கணக்குகள் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

மகா கும்பம் 2025க்கு களங்கம் விளைவிக்கும் வகையில் தவறான தகவல்களை பரப்பும் தனிநபர்கள் மற்றும் சமூக வலைதள கணக்குகளுக்கு எதிராக உத்தரபிரதேச காவல்துறை தீவிரப்படுத்தியுள்ளது. முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் உத்தரவை தொடர்ந்து, ஆன்லைன் தளங்களை போலீசார் விழிப்புடன் கண்காணித்து, தவறான தகவல்களை பரப்பிய 54 சமூக ஊடக கணக்குகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்துள்ளனர்.

பிப்ரவரி 13, 2025 அன்று, வழக்கமான சமூக ஊடக கண்காணிப்பின் போது, ​​தவறாக வழிநடத்தும் இரண்டு வீடியோக்கள் அடையாளம் காணப்பட்டன. எகிப்திலிருந்து ஒரு காணொளியும் பாட்னாவிலிருந்து ஒரு காணொளியும் பிரயாக்ராஜில் நடந்த மகா கும்பமேளாவில் நடந்ததாகக் கூறி சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டன. எகிப்து தீ விபத்து தவறாக சித்தரிக்கப்பட்டது: பலரால் பகிரப்பட்ட தவறான காணொளிகளில் ஒன்று, மகா கும்பமேளா பேருந்து நிலையத்தில் ஒரு பெரிய தீ விபத்து ஏற்பட்டதாகவும், அதில் 40-50 வாகனங்கள் எரிந்து நாசமானதாகவும் கூறியது. ஆனால் உண்மையில் அந்த காணொளி 2020 ஆம் ஆண்டு கெய்ரோவில் நடந்த குழாய் தீ விபத்தில் இருந்து வந்தது.

இந்தத் தவறான தகவலைப் பகிர்ந்ததற்காக X இல் India With Congress (@UWCforYouth) உட்பட ஏழு சமூக ஊடகக் கணக்குகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்தப் பொய்யான தகவலைப் பரப்பிய ஏழு சமூக ஊடகக் கணக்குகள் மீது கோட்வாலி கும்பமேளா காவல் நிலையத்தில் போலீசார் FIR பதிவு செய்தனர்.