லக்னோ:
கருவில் இருப்பது ஆணா? பெண்ணா? என்பதை கூறும் மருத்துவமனை அல்லது ஸ்கேன் மையங்களை கண்டுபிடிக்க உதவும் கர்ப்பிணிகளுக்கு ரூ. 1 லட்சம் பரிசு கொடுக்கும் திட்டத்தை வரும் 1ம் தேதி முதல் உ.பி. அரசு அறிமுகம் செய்கிறது.

குழந்தை பிறப்பில் பாலின வித்தியாசம் குறைந்து வருவதை கட்டுப்படுத்த மேற்கொள்ளப்ப டும் நடவடிக்கைகளில் இதுவும் ஒன்று என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி உ.பி.யில் ஆயிரம் பையன்களுக்கு 902 பெண் குழ ந்தைகள் இருக்கின்றனர்.
இது 2001ம் ஆண்டில் 916ஆக இருந்தது. பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதாச்சாரம் கறைந்து வருவது மாநிலத்தல் பெருங் கவலையாக உள்ளது. இதை உடனடியாக கட்டுப்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. பெண் சிசிக்கள் கொலை மற்றும் சட்ட விரோதமாக கருவில் இருப்பது ஆணா? பெண்ணா? என்பதை கண்டறிதல் போன்றவை தான் காரணம் என மாநில சுகதார துறை முதன்மை செயலாளர் பிரசாந்த் திவேதி தெரிவித்துள்ளார்.
மேலும், இவர் அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் ஒரு கடிதம் அனுப்பியுள்ளார். இதில் தேசிய சுகதார அமைப்புடன் இணைந்து ‘‘டெகாய் ஆபரேஷன்’’ (ஆசை காட்டி ஆபத்தை ஏற்படுத்துதல்) திட்டத்தை வரும் 1ம் தேதி முதல் செயல்படுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
இந்த திட்டத்திற்கு ரூ. 2 லட்சம் பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ரூ. 60 ஆயிரம் சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் மருத்துவமனை அல்லது ஸ்கேன் மையங்கள் குறித்த தகவலை அரசுக்கு அளிக்கும் இன்பார்மர்களுக்கு வழங்கப்படும். டெகாய் ஆபரேஷ க்கு ஒத்துழைக்கும் கர்ப்பிணிக்கு ரூ. 1 லட்சமும், இவருடன் கணவர் அல்லது உறவினராக நடிப்பவர்களுக்கு ரூ. 40 ஆயிரம் வழங்கப்படும். இவர் தனி நபர் சாட்சியாக வழக்கில் சேர் க்கப்படுவார்.
இந்த பரிசுத் தொகை 3 தவணைகளில் வழங்கப்படும். முதன் தவணை ஆபரேஷன் வெற்றி கரமாக முடிந்தவுடன், 2வது தவணை நீதிமன்றத்தில் சாட்சி கூறியவுடனும், 3வது ஆபரேஷன் தண்டனை வழங்கப்பட்டவுடன் வழங்கப்படும்.
இந்த ஆபரேஷனில் பங்கு பெறுபவர்களின் பெயர், விபரங்கள் சங்கேத வார்த்தைகளில் மட் டுமே குறிப்பிடப்படும். தகவல்கள் ரகசியம் காக்கப்படும். இந்த ஆபரேஷனை தவறாக பயன்படுத்தினால் இன்பார்மர், கர்ப்பிணி உள்ளிட்டவர்கள் கறுப்பு பட்டியலில் சேர்க்கப்படுவர். இந்த திட்டத்தில் சேருவோரது எண்ணிக்கையை பொறுத்து மாநில, மாவட்ட வாரியாக குழு க்கள் அமைக்கப்படுகிறது.
உ.பி. தவிர ஹரியானா, பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில் இந்த திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் அங்கு பரிசுத் தொகையில் 40 சதவீதம் கர்ப்பிணக்கு வழங்கப்படுகிறது. உ.பி.யில் 50 சதவீதம் வழங்கப்படுகிறது. தேசிய அளவில் 2001ம் ஆண்டில் பாலின வேறுபாடு விகிதாச்சாரம் 927 ஆக இருந்தது. 2011ல் 919ஆக குறைந்தது.
2011ம் ஆண்டில் உபி 902, ஹரியானா 834, ராஜஸ்தான் 888, குஜராத் 890, டெல்லி 871 என்ற நிலையில் இருந்தது. இதற்கிடையில் 2015ம் ஆண்டில் இந்த எண்ணிக்கை ராஜஸ்தானில் 925 என்றும், ஹரியானாவில் 950 என்றும் அதிகரித்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.