இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஆப்பிள் ஐ போன்கள் பெங்களூருவில் விற்பனை!!

பெங்களூரு:

முதன் முறையாக இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஆப்பிள் ஐபோன் எஸ்இ ஸ்மார்ட் போன்கள் பெங்களூருவில் சில கடைகளில் விற்பனை செய்யப்படுகிறது. இதில் 32 ஜிபி மாடல் ரூ. 27 ஆயிரத்து 200க்கும், 128 ஜிபி மாடல் ரூ. 37 ஆயிரத்து 200க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இந்த ஐ போன்களில் ‘‘ டிசைண்டு பை ஆப்பிள் இன் கலிபோர்னியா, அசெம்பிள்டு இன் இந்தியா’’ என்ற வாசகங்கள் இடம்பெற்றுள்ளது. ஜி.எஸ்.டி அமலுக்கு பிறகு இந்தியாவில் ஆப்பிள் ஐபோன்களின் தயாரிப்பு மேலும் வளர்ச்சி அடையும் என கூறப்படுகிறது. பெங்களூருவில் உள்ள சில மறுவிற்பனையாளர்கள் மற்றும் சில்லரை விற்பனையாளர்கள் வசம் சில ஐபோன்கள் மட்டுமே இருப்பு வைததுள்ளனர்.

ஆப்பிள் நிறுவனத்தில் அசல் உதிரிபாகங்கள் தயாரிப்பாளரான தைவானை சேர்ந்த விஸ்ட்ரன் நிறுவனம் பெங்களூருவின் முக்கிய தொழில் பகுதியான பீன்யாவில் இருந்து இங்கு தயாரி க்கப்பட்ட சில ஆயிரம் ஆப்பிள் எஸ்இ மாடல் ஐ போன்களை பேக்கிங் செய்து கொண்டு சென்றிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இதன் மூலம் ஆப்பிள் நிறுவனத்தின் தொழிற்சாலை அமைந்த 3வது நாடு இந்தியா என்ற பெருமை கிடைத்துள்ளது.


English Summary
Apple’s first batch of ‘Assembled in India’ iPhone SE devices hit the market