பிரபல நடிகர் வீட்டில் 7 கோடி ரூபாய் பழைய நோட்டுகள்!

தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் நடித்து பிரலமானவர்கள்  டாக்டர் ராஜசேகர் மற்றும் ஜீவிதா தம்பதி. இவர்கள் தங்கள் இரு மகள்களுடன் ஹைதராபாத் பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் வசித்துவருகிறார்கள்.

இவர்களது  வீட்டில் பழைய ரூ 500. 1000 நோட்டுகள் கோடிக்கணக்கில் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினருக்கு தகவல் வந்தது. இதையடுத்து ராஜசேகர் – ஜீவிதா தம்பதி வீட்டில் சோதனை நடத்தப்பட்டது.

அப்போது ஜீவிதாவின் மேனேஜர் ஸ்ரீ நிவாஸ் கையில் வைத்திருந்த பையில்  ரூ.7 கோடி மதிப்பிலான பழைய ரூபாய் நோட்டுகள் இருந்தது கண்டறியப்பட்டது. ஆகவே  அவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

இது பற்றி நடிகை ஜீவிதா கூறுகையில், ஸ்ரீ நிவாஸ் பல படங்களை தயாரித்து வருகிறார். எங்கள் வீட்டில் வைத்து அவர் கைது செய்யப்பட்டிருப்பது, எங்கள் வீட்டில் இருந்து தான் பணம் கைப்பற்றப்பட்டது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. மற்றபடி அந்த பணத்துக்கும் எங்களுக்கும் எந்தவித தொடர்பும் கிடையாது’’ என்றார்.

சென்னையில் உள்ள ஜாய் ஸ்போர்ட்சில் புரடக்ஷன் மேனேஜராக ஸ்ரீநிவாஸ் பொறுப்பு வகிக்கிறார்.  சென்னையில் வசிக்கும்  கோட்டீஸ்வர் என்பவரிடம் இருந்து இந்தப் பணத்தை ஸ்ரீநிவாஸ் பெற்று வந்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து  காவல்துறையினர்  விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

 
English Summary
7 Crore old currency notes found at actress jeevitha and actor rajasekhar’s house!!