உத்திரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்திய நாத் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீஸ் அதிகாரி சஸ்பெண்ட்

Must read

உத்திரப் பிரதேசம்:

உத்திரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்திய நாத் மீது கடந்த 2002-ம் ஆண்டு தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீஸ் அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

யோகி ஆதித்யநாத் கோரக்பூர் எம்பியாக இருந்தபோது, அவர் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் எஸ்பி- ஆக இருந்த ஜஸ்வீர் சிங் வழக்குப் பதிவு செய்தார்.

இது குறித்து பத்திரிக்கை ஒன்றுக்கு பேட்டியளித்த அவர், ஆதித்யநாத் மீதான வழக்கை வாபஸ் பெறுமாறு, அப்போது மத்தியில் ஆண்ட பாஜகவும் , மாநிலத்தில் ஆண்ட பகுஜன் சமாஜ் கட்சியும் நிர்பந்தித்தனர் என்று கூறியிருந்தார்.

இந்த பேட்டி வெளியாகி ஒரு வாரத்தில் அவரை உத்திரப்பிரதேச அரசு சஸ்பெண்ட் செய்துள்ளது.

 

 

More articles

Latest article