உத்தராக்கண்டில் வியாழனன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த  உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தகுதிநீக்கம் செய்யப்பட்ட 9 எம்.எல்.ஏ-க்களும் வாக்களிக்க அனுமதி.
உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளர் மேர்பார்வையில் இந்த நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது.
இதற்கிடையே, ஜனாதிபதி ஆட்சிக்கு தடை கோரிய வழக்கை, உச்ச நீதிமன்றம் அடுத்தவாரம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வுள்ளது. தாகூர், பானுமதி, லலித் ஆகிய மூவர் அடங்கிய அமர்வு இதனை அறிவித்தது.

Union Minister of State in the Ministries of Parliamentary Affairs Harish Rawat
ஹரிஸ் ராவத், முதல்வர், உத்தரகாண்ட்

திடீரென மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவைக் கூடி, உத்தரக்காண்டில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தியதை அடுத்து, காங்கிரஸ் கட்சி இதனை எதிர்த்து இன்று வழக்கு தொடர்ந்தது.