தென் ஆப்பிரிக்கா – ஆஸ்திரேலியா இடையேயான 3-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, அடிலெய்டில் பகலிரவாக நடைபெற்று வருகின்றது. இப்போட்டியில் முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்கா அணி 76 ஓவர்களில் 9 விக்கெட்டை இழந்து 259 ரன்கள் எடுத்த நிலையில் முதல் இன்னிங்க்ஸ்யை டிக்ளேர் செய்தது. கேப்டன் டூபிளெஸ்ஸிஸ் ஆட்டமிழக்காமல் 118 ரன்கள் எடுத்தார். ஆஸ்திரேலிய பவுலர் ஜோஷ் ஹேஸில்வுட் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
பின்னர் முதல் இன்னிங்ஸ்-யை துவங்கிய ஆஸ்திரேலியா முதல் நாள் ஆட்டநேர முடிவில் 12 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 14 ரன்கள் எடுத்திருந்தது. இரண்டாவது நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலியா அணி 102 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 307 ரன்கள் குவித்துள்ளது. உஸ்மான் கவாஜா 285 பந்துகளில் 12 பவுண்டரிகளுடன் 138 ரன்களும், மிட்செல் ஸ்டார்க் 50 பந்துகளில் 16 ரன்களும் சேர்த்து களத்தில் உள்ளனர். தென் ஆப்பிரிக்க பவுலர் கைல் அபாட் அதிகபட்சமாக மூன்று விக்கெட்டுகளை சாய்த்துள்ளார்.
இதன்மூலம் முதல் இன்னிங்ஸில் தென் ஆப்பிரிக்கா அணியை விட ஆஸ்திரேலியா 48 ரன்கள் முன்னிலையில் உள்ளது.
[youtube-feed feed=1]