பசுவின் சாணமானது பொங்கல் விழா போன்ற காலக்கட்டத்தில் மட்டுமே நினைவில் வைத்துக்கொள்ளும் சூழ்நிலை இன்று நிலவுகிறது
பண்டைய காலத்தில் இருந்து அன்றாக வாழ்க்கைத் தேவைகளை பூர்த்தி செய்வதற்காகவும், விவசாயத்திற்காகவும், பசுக்களை நாம் பயன்படுத்தி வந்தோம். தற்சமயம் பசுவை அரசியலாக்கிவிட்டதால் அதன் உண்மையான மகத்துவம் மக்களுக்கு தெரியாமல் போய்விட்டது.
பசுவின் சாணமானது விவசாயத்திற்கு மிகவும் மகத்துவம் கொண்டதாகவும், ஆன்மீக அளவிலும் இதை பெருமளவில் பயன்படுத்துகிறன்றனர்.ஏறக்கறைய 20 வருடங்களுக்கு முன்பு தினமும் அல்லது செவ்வாய் , வெ ள்ளி, பண்டிகை்காலங்களில் வீடு, வாசல் மொழுகி அதில் கோலமிடுவர். ஆனால் இப்போதே செயற்கையான பொடிகளை பயன்படுத்து சிற்றுயிர்களுக்கும் தீங்கு விளைவித்துக்கொண்டிருக்கின்றோம்
பசுவின் சாணத்தில் 24 ஊட்டச்சத்துக்கள் (மனிதர்கள் உண்ணக்கூடியது அல்ல), அடங்கியுள்ளன , அதில் நைட்ரஜன், பொட்டாசியம், சல்பர், இரும்புசத்து, கோபால்ட் , மெக்னீசியம், காப்பர் போன்றவை உள்ளது , குறிப்பாக இந்திய ரக பசுக்களில் கால்சியம், பாஸ்பரஸ் , துத்தநாகம் போன்ற சத்துக்களும் குறிப்பிடத்தக்க அளவு உள்ளன
https://bioresourcesbioprocessing.springeropen.com/articles/10.1186/s40643-016-0105-9
சுற்றுப்புற சூழலுக்கு ஏற்ற அதிகமான பாக்டீரியாக்கள், பூஞ்சை மற்றும் புழுக்கள் உள்ளன
இவற்றின் நொதிக்கும் தன்மையால் இயற்கை உரமாக மாறுகின்றது.
இதில் உயிர்வலி(BioGas) மூலம் மீத்தேன் வாயு கொண்டு சமையல் எரிபொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது. இது மிகவும் பாதுகாப்பான எரிபொருள் . ஏனெனில் இது வெடிக்காது
ஒரு கிலோ பாசும் சாணத்தில் 55% முதல் 65% வரை எரிவாயு கிடைக்கும். ஒரு பசு/மாடு 9 முதல் 15 கிலோ சாணம் ஒரு நாளைக்கு கொடுக்கிறது. இவற்றினை அதிகமாக மறு பயன்பாட்டுக்கு பயன்படுத்தாமல் குப்பையாக வைத்து வீணாக்குகின்றனர்.
பசு/மாடுவின் எருமட்டை சித்தமருத்துவத்தில் மருந்துகளை புடம் போடுவதற்கும், கொசுக்கள அண்டாதிருப்பதற்கும் பயன்படுகிறது, மேலும் எருமட்டை கொண்டு உணவுகள் சமைக்கலாம், இவ்வாறு சமைப்பதால் பணமும் மிச்சமாகும், அதிகமான எரிபொருளை நாம் செலவு செய்யவேண்டியதில்லை
பஞ்ச காவ்யா
பஞ்ச காவியமானது விவசாயத்திற்கு பல்வேறு விதமான நன்மைகளை செய்கிறது. குறிப்பாக பயிர்களுக்கு ஊட்டச்சத்து வழங்கவும், கிருமி நாசினியாகவும் விளங்கிறது.
பஞ்சகவ்யாவில் சேர்க்கப்படும் சேர்மானங்களைக்கொண்டு நிறைய மகசூழ் பெற முடியும்.
பஞ்சகாவ்யா வின் அடிப்படை, பால், தயிர்,நெய், கோமியம், மாட்டுச்சாணம், இதுதுான் அடிப்படை இதனுடன் இளநீர், பூவன் வாழப்பழம் போன்றவை சேரும்போது இதன் செறிவு இன்னமும் அதிகமாகிறது
பாசு சாணத்தில் வீட்டு வாசலில் மொழுகும் போது சிறும் பூச்சிகள் மற்றும் விசப்பூச்சிகள் அண்டாது
விதை நடுவதற்கு முன்பு மாட்டுச்சாணத்தில் முக்கி எடுப்பதும் தொன்றுதொட்டு நடைபெறும் ஒன்று.
எங்கே என்ன நிகழ்ச்சி நடந்தாலும் மாட்டுசாணத்தில் பிள்ளையார் பிடித்து வைப்பது தமிழர்களின் மரபு
சித்தர் பாடல்
பசுவின் சாணத்தின் குணம்
ஆவினது சாண மடிபடுவீக்கம்முதிரந்
தாவரம் கிருமி சார்ந்தகப-மேவுசுரந்
தங்குந தாகம் போக்குஞ் சாற்றின்மெய்ச்
சுத்தியப்பால்
தெங்கின் பாலுக்கொக்குந் தேர்.
பயன்கள்
பசுஞ்சாணமத்தை, கல் முதலியவைகளால் அடிபட்ட
வீக்கம் ஒழுகுகின்ற உத்திரம் கிருமிரோகம்
கபசுரதாகம் இவைகளை நீக்கும் தேக
சுத்தியுண்டாகும்
மருத்துவர் பாலாஜி கனகசபை, MBBS, PhD
அரசு மருத்துவர்
கல்லாவி
கிருஷ்ணகிரி மாவட்டம்
9942922002