
பாரிஸ்: ஃபிபா மகளிர் உலகக்கோப்பை இறுதிப் போட்டியில், நெதர்லாந்தை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி, சாம்பியன் பட்டத்தை தக்கவைத்தது அமெரிக்க மகளிர் கால்பந்து அணி.
அமெரிக்க அணியின் மெகன் ரேப்பினோவுக்கு கிடைத்த பெனால்ட்டி வாய்ப்பும், ரோஸ் லேவல்லுக்கு கிடைத்த கோல் வாய்ப்பும் இந்த வெற்றியை அடைய உதவியது.
இந்தப் போட்டியில் நெதர்லாந்து அணியின் கோல் கீப்பர் மிகவும் திறமையாக செயல்பட்டார். இப்போட்டியில் ஒரு கோல் அடித்து, மொத்தமாக 6 கோல்கள் அடித்ததன் மூலமாக, அமெரிக்காவின் ரேப்பினோவும் அதிக கோல்கள் அடித்தவர்களின் பட்டியலில் இணைந்தார்.
இந்த உலகக்கோப்பையையும் வென்றதன் மூலம், மகளிர் உலகக்கோப்பையில் அமெரிக்கா தனது ஆதிக்கத்தை தொடர்ந்து தக்கவைத்து வருகிறது. இதுவரை மொத்தம் 4 முறை அமெரிக்க மகளிர் அணி, கால்பந்து உலகக்கோப்பையை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும், தொடர்ச்சியாக மூன்று முறை இறுதிப் போட்டிக்கு முன்னேறிய அணி என்ற பெயரையும் அமெரிக்க அணி பெற்றுள்ளது.
[youtube-feed feed=1]