உலகக்கோப்பை லீக் ஆட்டங்கள் முடிவடைந்து, அரையிறுதிப் போட்டிகளில், இந்தியா – நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா – இங்கிலாந்து அணிகள் மோதவுள்ள நிலையில், அந்த 4 அணிகளின் பலம் மற்றும் பலவீனங்கள் குறித்த ஒரு சிறிய மதிப்பீடு.

இந்தியா

பலம்

மிகவும் வலுவான டாப் பேட்டிங் ஆர்டர். ரோகித் ஷர்மா தொடர்ந்து பெரிய ரன்களை குவிப்பது. பும்ராவின் சிக்கமான மற்றும் சிறப்பான பந்துவீச்சு. கேப்டன்சி மற்றும் பேட்டிங்கில் விராத் கோலி சிறப்பாக செயல்படுவது.

பலவீனம்

பலவீனமான மிடில் ஆர்டர். எதிர்பார்த்தபடி தோனி ஆடாதது. ஷமி மற்றும் புவனேஷ்வர் போன்ற வேகப்பந்து வீச்சாளர்கள் அதிக ரன்களை விட்டுக் கொடுப்பது.

நியூசிலாந்து அணி

பலம்

வில்லியம்ஸனின் கேப்டன்சி மற்றும் பேட்டிங். நீஷம் மற்றும் காலிங் ஆகிய ஆல்ரவுண்டர்களின் சிறப்பான செயல்பாடு.

பலவீனம்

கேப்டனையே அதிகம் நம்பியிருப்பது. கடைசி 3 லீக் போட்டிகளிலும் மோசமாக தோற்று பலவீன மனநிலையில் இருப்பது. வேறு பேட்ஸ்மென்கள் சிறப்பாக செயல்படாதது.

ஆஸ்திரேலிய அணி

பலம்

டேவிட் வார்னர் மற்றும் ஃபின்ச் ஆகியோரின் சிறப்பான பேட்டிங். ஸ்டார்க், கம்மின்ஸ் மற்றும் ஜேஸன் ஆகியோரின் சிறப்பான ஃபார்மிங். பின்கள வீரர்களும் ரன்கள் எடுப்பது.

பலவீனம்

உஸ்மான் குவாஜா மற்றும் ஸ்டாய்னிஸ் ஆகியோரின் காயம். ஸ்டாய்னிஸ் மற்றும் மேக்ஸ்வெல் ஆகியோரின் பந்துவீச்சுகளில் அதிகம் ரன்கள் கொடுக்கப்படுவது. ஸ்மித் இன்னும் முழுமையான ஃபார்முக்கு வராதது.

இங்கிலாந்து அணி

பலம்

துவக்க இணையான ராய் மற்றும் பேர்ஸ்டோ சிறப்பாக ஆடுவது. வேகப்பந்து வீச்சாளர்கள் நல்ல தாக்கத்தை ஏற்படுத்துவது.

பலவீனம்

அணியின் நிச்சயமற்ற செயல்பாடு. இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளிடம் தோற்றது. லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவிடமும் பெரிய தோல்வியை சந்தித்திருந்தது.