மெரிக்காவில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் இன்சுலின் மருந்தின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளதால் மருந்தை வாங்க முடியாமல் லட்சக்கணக்கான சர்க்கரை நோயாளிகள் பெரும் அவதிக்குள்ளாவதாக செய்திகள் வெளிவந்துள்ளன.
insulin_800x600
அமெரிக்காவில் சுமார் 3 கோடி சர்க்கரை நோயாளிகள் இருப்பதாக  சர்வே கூறுகிறது. .  இதன் காரணமாக  இன்சுலின் மருந்துக்கான தேவை அதிகரித்து வருகிறது.
இதன் காரணமாக  இன்சுலின்  விலை அதிரடியாசக  ஏற்றப்பட்டு உள்ளது.  இந்த திடீர் விலை ஏற்றத்துக்கான காரணம் தெரியவில்லை என  மருந்து தயாரிப்ப வர்களும் விற்பவர்களும் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டி வருகிறார்கள். இது குறித்து அந்நாட்டின் மருத்துவர்கள் ஆழ்ந்த கவலையும் கண்டனமும் தெரிவித்துள்ளனர்.
2011 ஆம் ஆண்டிலிருந்து 2013 ஆம் ஆண்டுவரை கிட்டத்தட்ட 33%-இலிருந்து 107% வரை விலை உயர்வு ஏற்பட்டுள்ளதாக லாஸ் ஏஞ்சல்ஸ் நகரைச் சேர்ந்த மேயர் டேவிட்சன் என்ற மருத்துவத்துறை பேராசிரியர் குறிப்பிடுகிறார்.
“இது நம்பமுடியாத விலை உயர்வு!” என்று குறிப்பிடும் அவர் 2001-ஆம் ஆண்டு 45 டாலருக்கு விற்கபட்ட இன்சுலின் மருந்து, கடந்த ஆண்டு 1,447 டாலருக்கு விற்கப்பட்டதாக கூறுகிறார்.
இன்சுலின் விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்துவிட்டதால்,  வீட்டு வாடகை, உணவு உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளை சந்திப்பதா அல்லது இன்சுலின் வாங்குவதா என்ற நிர்பந்தமான  நிலை நடுத்தர வர்க்க நோயாளிகளுக்கு ஏற்பட்டுள்ளது.
இந்நிலை நீடித்து சர்க்கரை நோய் முற்றும் பட்சத்தில் பார்வை இழப்பு, கிட்னி பாதிப்பு, மாரடைப்பு, நரம்பு மண்டலப் பிரச்சனைகள், அறுவைச் சிகிச்சை மூலம் கால்களை துண்டிக்க வேண்டிய நிலை ஆகியவை ஏற்படும். இன்சுலின் கிடைக்காத பட்சத்தில் நோயாளி கோமாநிலைக்கு செல்லவும், திடீர் மரணமடையவும் வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றது என்று மருத்துவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.