டில்லி

மெரிக்க விவரங்களை கையாளும் நாடுகளுக்கு எச் 1 பி விசா வழங்குவதில் மேலும் கட்டுப்பாடுகள் விதித்துள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே தற்போது வர்த்தகம் மிகவும் சரிந்து வருகிறது.   இந்தியாவை அமெரிக்கா வர்த்தகத்துக்கு உரிய நாடுகள் பட்டியலில் இருந்து நீக்கியது.  அதை ஒட்டி இந்தியா ஏற்றுமதி செய்யும் பொருட்களுக்கு வரியை அதிகப்படுத்தியது.    இந்த வரியை நீக்க அதிபர் டிரம்ப் பேச்சு வார்த்தை நடத்திய போது இந்தியா அதை குறைக்க ஒப்புக் கொண்டது.  ஆனால் முழுமையாக நீக்க மறுத்துள்ளது.

இந்தியாவில் இருந்து ஏராளமானோர் அமெரிக்காவில் எச் 1 பி விசா மூலம் சென்று பணி புரிந்து வருகின்றனர்.    அந்த விசா வழங்கும் போது குடும்பத்தினருக்கான விசா விதிகளை அமெரிக்கா மிகவும் கடுமை ஆக்கியது.  இதனால் இந்தியர்கள் பலர் துயருற்றனர்.  தற்போது அமெரிக்கா இந்த விசா வழங்குவதில் மேலும் கட்டுப்பாடுகள் விதித்துள்ளது.

அமெரிக்காவின் விவரங்கள் பல நாடுகளில் தொலைதொடர்பு தொழில்நுட்ப நிறுவனங்களிடம் பகிரப்பட்டு வருகின்றன.  அவற்றில் இந்தியாவும் ஒன்றாகும்.  இவ்வாறு பகிரப்படும் நிறுவனங்கள் தங்கள் பணிகளை அந்தந்த நாடுகளில் இருந்து நடத்தி வருகின்றன.    அமெரிக்க அரசு இந்த நிறுவனங்கள் குறித்து சமீபத்தில் பரிசீலனை நடத்தி உள்ளது.

அதை ஒட்டி தற்போது அமெரிக்காவில் பணி புரிய ஒவ்வொரு நாட்டுக்கும் அளிக்கப்படும் விசாக்களின் அளவில் 10% முதல் 15% வரை இத்தகைய நாடுகளில் குறைவாக அளிக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.   ஏற்கனவே இந்நாட்டினர் பலர் அமெரிக்காவுக்காக பணிபுரிவதால் இந்த விசா குறைப்பு செய்யப்பட்டுள்ள்தாக அரசு அறிவித்துள்ளது.