அமெரிக்காவில் செயல்பட்டு வரும் சீக்கிய பிரிவினைவாத அமைப்பின் தலைவரான குருபத்வந் சிங் பன்னு-வை கொலை செய்ய இந்தியா மேற்கொண்ட திட்டத்தை அமெரிக்கா முறியடித்தாகவும் இதுகுறித்து இந்தியாவை அமெரிக்கா எச்சரித்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் அமெரிக்க பயணத்தின் போது பன்னு-வை கொலை செய்ய இந்திய உளவு அமைப்புகள் திட்டமிட்டதாகவும் இதுதொடர்பாக இந்திய அதிகாரிகளை அமெரிக்கா எச்சரித்தை அடுத்து இதில் தொடர்புடைய ஒரு அதிகாரி இந்தியா திரும்பினார்.
இந்த விவகாரம் குறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற ஜி-20 மாநாட்டின் போது பிரதமர் மோடியிடம் விவாதித்ததாகவும். அமெரிக்க மண்ணில் இதுபோன்ற சம்பவங்களில் இந்தியா ஈடுபடுவதை எச்சரித்ததாகவும் கூறப்படுகிறது.
ஏற்கனவே கனடாவில் சீக்கிய பிரிவினைவாதி கொல்லப்பட்ட விவகாரத்தில் இந்தியா கனடா இடையிலான நட்புறவில் விரிசல் எழுந்த நிலையில் அமெரிக்க மண்ணிலும் இந்தியா இதுபோன்ற புயற்சியில் இறங்கியதாக வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.