வாஷிங்டன்,
பயங்கரவாதத்தை ஒழிக்க பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்ட வந்த நிதி உதவியை அமெரிக்கா நிறுத்தி உள்ளது. பயங்கரவாதத்துக்கு எதிரான போக்கில் அமெரிக்கா தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
இதன் காரணமாக காரணமாக உலகம் முழுவதும் பயங்கர வாதத்தை அடியோடு ஒழிக்க, அதன் கூட்டணி நாடுகளுக்கு நிதி உதவி வழங்கி வருகிறது.
இந்நிலையில், பாகிஸ்தானின் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையில் திருப்தியில்லாததால், நிதிஉதவியை அமெரிக்கா நிறுத்தி உள்ளது.
பாகிஸ்தான் அரசு பயங்கரவாதிகளுக்கு புகலிடமாக உள்ளது. இதுகுறித்து அமெரிக்கா பலமுறை பாகிஸ்தானை எச்சரித்தும், பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்காததால், நிதி உதவியை நிறுத்தி அதிரடியாக நடவடிக்கையில் இறங்கி உள்ளது.
இதன்படி, அந்த நாட்டுக்கு வழங்கவிருந்த 255 மில்லியன் டாலர் (சுமார் ரூ.1,657 கோடி) ராணுவ நிதி உதவியை அமெரிக்கா அதிரடியாக நிறுத்தி விட்டது. இதை அமெரிக்க ஜனாதிபதியின் வெள்ளை மாளிகை உயர் அதிகாரி உறுதி செய்துள்ளார்.
இதை அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்பும் தனது டுவிட்டர் பதிவு மூலம் உறுதி செய்துள்ளார்.