trump hilari
கடந்த செவ்வாய்க்கிழமையன்று நடைபெற்ற  நியூயார்க் மாநில ஜனாதிபதித் தேர்தல் போட்டிகளில் டொனால்ட் டிரம்ப் மற்றும் ஹிலாரி கிளிண்டன் எளிதாக வெற்றிப் பெற்றனர். அவர்கள் இருவரும் மந்தமாக துவங்கிய பிரச்சாரத்தை, தங்களின் அயரா உழைப்பினால், இழந்த பரபரப்பை மீட்டெடுத்து தங்கள் கட்சிகளின் வெற்றிக்காக பெரிய நடவடிக்கைகளை எடுத்து இந்த வெற்றியினைப் பெற்றுள்ளனர்.
 
குடியரசுக் கட்சியின் உறுப்பினரான டொனால்ட் டிரம்ப், அவரது  சொந்த மாநிலத்திலேயே பிரம்மாண்டமாக வெற்றி பெற்றது, அவரது கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக இருக்க அவருக்குத் தேவையான 1,237 பிரதிநிதிகளையும் கைப்பற்றும் அளவிற்கு அவர் நெருங்கியது மட்டுமல்லாமல் ஜூலை மாதம் நடக்கவிருந்த ஒரு தேசிய மாநாட்டுப் போட்டியையும் தவிர்த்துள்ளது.
ஹிலாரி கிளின்டன் முன்னமே ஒரு முறை அமெரிக்க செனட்டில் பிரதிநிதியாக இருந்த நியூயார்க்கில் இப்போது அபாரமான இரட்டை இலக்க வெற்றி பெற்று, ஜனநாயக கட்சி வேட்பாளர் பெர்னி சாண்டர்ஸ் அவர்களின் தொடர்ச்சியான வெற்றியைத் துண்டித்தார்.

டொனால் டிரம்ப்
டொனால் டிரம்ப்

 
இதுவரை நடந்த மாநில வேட்புமனு போட்டிகளிலேயே டிரம்ப் மற்றும் கிளின்டனின் வெற்றிகள் தான் பெரியது, மேலும் இது அடுத்த செவ்வாய்க்கிழமை நடக்கவுள்ள மற்ற ஐந்து வடகிழக்கு மாநிலங்களின் முதல்நிலைத் தேர்தலில் அவர்கள் இருவரும் வலுவான போட்டியாளர்களாக இருந்து செயல்படுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டெக்சாஸைச் சார்ந்த அமெரிக்க செனட்டர் டெட் குரூஸ் மற்றும் ஓஹியோ கவர்னர் ஜான் காசிச் ஆகிய இருவரையும் டிரம்ப் எளிதாக தோற்கடித்து, நியூயார்க்கின் 95 குடியரசுப் பிரதிநிதிகளின் இடத்தையும் வெற்றிப் பெற்றார். நான்கில் மூன்று பங்கு முடிவுகளுக்கு மேல் எண்ணப்பட்டு மாநிலம் முழுவதிலுமிருந்து 60% வாக்குகளோடு டிரம்ப் வெற்றிப் பெற்றார்.