வாஷிங்டன்: உளவு செயற்கைகோளுடன் அனுப்பப்பட்ட அமெரிக்க விண்வெளி ராக்கெட் ஏவிய சில விநாடிகளிலேயே வெடித்துச் சிதறியது.
அமெரிக்க புலனாய்வு துறையான என்.ஆர்.ஓ.,  ப்ளோரிடா மாகாணத்தில் உள்ள கேப் கெனவரல் என்ற இடத்தில் இருந்து டெல்டா 4 என்ற உளவு ராக்கெட் மூலமாக செயற்கைகோளை விண்ணில் ஏவியது.
13-1465804196-sateliteblast-600
இதுவரை அமெரிக்கா அனுப்பப்பட்ட ராக்கெட்டுகளிலேயே இது மிகவும் பெரியது.  மொத்தம் மூன்று அடுக்குகள் கொண்டது இந்த ராக்கெட்.
ராக்கெட் கிளம்பிய சில நிமிடங்களிலேயே விண்ணில் வெடித்துச் சிதறி கடலில் விழுந்தது. அப்போது அமெரிக்க நேரப்படி இரவு 1.51 மணி.
விபத்துக்கான காரணம் குறித்து அமெரிக்க விண்வெளி அமைப்பான நாசா விசாரணை மேற்கொள்ளும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.