டெல்லி: இந்தியாவில் வாக்கு சதவீதத்தை அதிகரிக்க, பைடன் நிர்வாகம் வழங்கி வந்த 180 கோடி ரூபாய் நிதி நிறுத்தப்பட்டுள்ள நிலையில், அதை யாருக்கு வழங்கியது, அதை பெற்றது யார் என பாஜக கேள்வி எழுப்பி உள்ளது. இது இந்திய அரசியல் களத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

உலக வல்லரசு நாடுகளுக்கு இணையாக முன்னேறி வரும் இந்தியாவை சீர்குலைக்க சில அந்நிய சக்திகள் பல்வேறு திட்டங்களை வகுத்து, சலசலப்பை ஏற்படுத்தி வரும், இந்தியாவில் வாக்கு சதவிகிதம் அதிகரிப்பு என்ற பெயரில், கடந்த அமெரிக்க நிர்வாகம் (பைடன் அரசுஸ்ரீ ரூ.180 கோடியை இந்தியாவுக்கு வழங்கி உள்ளது. இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிதியை தற்போதைய டிரம்ப் அரசின்  எலான் மஸ்க் தலைமையிலான குழு ரத்துசெய்துள்ளது.

அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது நிர்வாகத்தில், அரசின் செயல்திறனை அதிகரிக்கவும், செலவினங்களை குறைக்கவும் தொழிலதிபர் எலான் மஸ்க் தலைமையில் செயல்திறன் குழுவை அமைத்துள்ளார். இக்குழு நிதி உதவி தொடர்பாக பல்வேறு அதிரடி முடிவுகளை எடுத்து வருகிறது. அந்த வகையில், இந்தியாவில் வாக்கு சதவீதத்தை அதிகரிக்க அமெரிக்கா அளித்து வந்த ரூ.180 கோடி நிதியை ரத்து செய்து எலான் மஸ்க் நேற்று அறிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியா உள்ளிட்ட பல நாடுகளிலும் தேர்தல் மற்றும் அரசியல் செயல்முறையை வலுப்படுத்தும் அமைப்புகளுக்கு 486 மில்லியன் டாலர் நிதி உதவியை அமெரிக்கா வழங்கி வந்தது. இதில் இந்தியாவுக்கு வழங்கி வந்த 21 மில்லியன் டாலர் (ரூ.180 கோடி) நிதியை கடந்த பைடன் ஆட்சி வழங்கி வந்தது. இது இந்தியாவின் மாண்புக்கு எதிரானது என குற்றம் சாட்டப்பட்டுவந்தது. இந்தியாவின் ஒற்றுமையை குலைக்கும் வகையில்,  அமெரிக்க தொழிலதிபர் ஜார்ஜ் சோரசின் அமைப்பு இந்திய தேர்தலில் தலையிட்டு மக்களிடையே பிளவு எடுத்த காங்கிரஸ் கட்சி மூலம் முயற்சித்ததாக ஏற்கனவே பாஜக குற்றம் சாட்டி யிருந்தது. 

தொழிலதிபர் ஜார்ஜ் சோரஸ், காங்கிரஸ் கட்சியுடன் நெருங்கிய தொடர்பில் இருந்து வருவதாக கூறப்பட்ட நிலையில், அவரது  இந்திய அரசு மீதான குற்றச்சாட்டும் பரபரப்பை ஏற்படுத்தியது.   ”மோடி பெரிய தலைவராக வேகமாக வளர முக்கியக் காரணம், இந்திய முஸ்லிம்கள் மீது நடத்தப்பட்ட வன்முறையே” என  கூறி சலசலப்பை ஏற்படுத்தினார்.  தொடர்ந்து,  அதானி மற்றும் பிரதமர் மோடியைப் பற்றியும் இணைத்துப் பேசினார்.

”மோடிக்கும் தொழிலபதிபர் அதானிக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. இருவரின் எதிர்காலமும் ஒன்றோடொன்று பிணைக்கப்பட்டுள்ளது” என அடுத்தடுத்து பாஜகவுக்கு எதிராக கருத்துகளைப் பகிர்ந்தார். அதைத்தொடர்ந்து வெளியான ஹிண்டென்பெர்க் அறிக்கை சர்ச்சை (தற்போது அந்நிறுவனம் மூடப்பட்டுள்ளது) மற்றும் இந்தியாவின் சில கட்சிகளுடன் சோரஸ் உடனான தொடர்பு குறித்தும் விமர்சனங்கள் எழுந்தன. ராகுல்காந்தி அமெரிக்கா சென்றிருந்தபோது, சோரஸ் அணியைச்சேர்ந்த சிலரை சந்தித்து பேசியதும் சலசலப்பை ஏற்படுத்தியது. இவற்றையெல்லாம் உறுதி செய்வதுபோல, காங்கிரஸ் உள்பட இண்டியா கூட்டணி கட்சிகள் பாஜகவுக்கு எதிரான போராட்டங்களை நடத்தின.

இந்த நிலையில், தற்போது அமெரிக்கா வழங்கிய ரூ.180 கோடி நிதி குறித்து கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது.

மெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் கடந்த ஜனவரி  மாதம் பதவியேற்ற்றது முதல் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அதன்படி, , நாட்டின் செலவினங் களை குறைப்பதற்கு நடவடிக்கை  எடுக்க,  டி.ஓ.ஜி.இ., எனப்படும் சிறந்த நிர்வாகத்துக்கான துறை என்ற அரசு சாரா துறையை உருவாக்கியுள்ளார். இதன் தலைவராக, பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க் உள்ளார்.

இந்த அமைப்பு  மூலம், அமெரிக்கா உலக நாடுகளுக்கு  பல்வேறு வகையான திட்டங்களுக்கு  வழங்கும் நிதி குறித்து ஆய்வு செய்து வருகிறது.  அமெரிக்கர்களின் வரிப்பணம் மற்ற நாடுகளுக்கு வழங்குவது நிறுத்தப்படும் என எலான் மஸ்க் கூறி வருகிறார்.  அதன்படி, இந்தியா உள்பட பல நாடுகளுக்கு தேவையின்றி வழங்கப்பட்ட நிதியை நிறுத்துவதாக அறிவித்து உள்ளது.  அதன்படி,  4,212 கோடி ரூபாய் நிறுத்தம் செய்யப்படுவதாக அறிவித்து உள்ளது.

. இந்த வரிசையில், இந்திய தேர்தல்களில் ஓட்டுப்பதிவை அதிகரிக்கும் திட்டத்துக்கு, 182 கோடி ரூபாயை  கடந்த பைடன் அரசு வழங்கி வந்த நிலையில், அதை  நிறுத்துவதாக எலான் மஸ்க்  அறிவித்துஉள்ளார்.  மேலும்,   அண்டை நாடான வங்கதேசத்தில் அரசியல் ஸ்திரத்தன்மைக்கான நிதி உட்பட பல நாடுகளில் பல திட்டங்களுக்கு வழங்கி வந்த, 4,212 கோடி ரூபாய் நிதியை நிறுத்துவதாக எலான் மஸ்க் உத்தரவில் கூறியுள்ளார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிதி யாருக்கு வழங்கப்பட்டது, அதன் நோக்கம் என்ன, இந்தியாவில் குழப்பத்தை ஏற்படுத்த பைடன் அரசு முயற்சித்ததா என பல கோணங்களில்  கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது.

இகுறித்து  பாஜவின் ஐடி பிரிவு தலைவர் அமித் மாள்வியா தனது எக்ஸ் தளபத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,, அமெரிக்காவின் நிதி,   ‘‘காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு வழங்கப்பட்டு உள்ளதாகவும்,   இதன்மூலம்,  இந்தியாவை பலவீனப்படுத்த முயற்சிக்கும், நாட்டின் நலன்களுக்கு எதிரான சக்திகள், இந்திய நிறுவனங்களுள் ஊடுருவுவதற்கு உதவியது தெளிவாகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அமெரிக்கா, இந்தியாவில்  வாக்கு சதவீதம் அதிகரிப்புக்கு ரூ.180 கோடி யாரிடம் கொடுத்தது? அதை  பெற்றது யார்?  இது நிச்சயமாக இந்தியாவின் தேர்தல் செயல்பாட்டில் அந்நிய தலையீடு. இதனால் யாருக்கு லாபம்? நிச்சயம் ஆளுங்கட்சிக்கு அல்ல’’ என கேள்வி எழுப்பி உள்ளார்.

ஜார்ஜ் சோரோஸ் யார்?

அமெரிக்க பெரும் கோடீஸ்வரர் மற்றும் முதலீட்டாளராக அறியப்படும் சோரோஸ், ஹங்கேரி நாட்டைச் சேர்ந்தவர். தனது குடும்பத்துடன் 1947இல் லண்டனுக்கு குடிபெயர்ந்தார். அவர், தத்துவத்தைப் படித்து ஒரு தத்துவஞானியாக மாற திட்டமிட்டார்.  பின்னர் லண்டன் வணிகர் வங்கியில் பணிபுரிந்தார். அதன்பிறகு, 1956இல் நியூயார்க் நகரத்திற்குச் சென்றார். அங்கு அவர் ஐரோப்பியப் பத்திரங்களின் ஆய்வாளராகத் தொடங்கினார். அதன்பிறகு, பங்குச் சந்தையில் பணத்தை முதலீடு செய்து சுமார் 44 பில்லியன் டாலர்கள் சம்பாதித்தார். அவற்றின் மூலம் பள்ளிகளையும் மருத்துவமனைகளையும் கட்டினார்.

ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகளுக்காகப் போராடும் அமைப்புகளுக்கும் உதவ ஆரம்பித்தார். 2010இல் மனித உரிமைகள் கண்காணிப்பகத்திற்கு மட்டும் டாலர் 100 மில்லியனை நன்கொடையாக அளித்து உலக நாடுகளின் கண்களை தன் பக்கம் திருப்ப வைத்தார்.  1984இல் தனது செல்வத்தின் ஒரு பகுதியைப் பயன்படுத்தி ஓபன் சொசைட்டி ஃபவுண்டேஷன்ஸ் என்ற பெயரில் ஓர் அறக்கட்டளையை நிறுவினார். இந்த அறக்கட்டளை, இப்போது சுமார் 120 நாடுகளில் செயல்படுகிறது.

2017இல் சுமார் 18 பில்லியன் டாலர்களை இந்த அறக்கட்டளை மூலம் பல்வேறு அமைப்புகளுக்கு வழங்கியதாகக் கூறப்படுகிறது. இது ஒருபுறமிருக்க மேலும் பல நாடுகளின் அரசியலிலும் பின்புலமாக செயல்பட்டு வந்ததாக கூறப்படுகிறருது.  1997இல் தாய்லாந்தின் நாணயத்தின் (பாட்) மீதான ஊகத் தாக்குதல்களுக்குப் பின்னணியில் இருப்பதாகக் குற்றம்சாட்டப்பட்டது. மேலும், அவர் அமெரிக்காவில் ஜனநாயக கட்சிக்கு ஆதரவாகவும் செயல்பட்டு வந்தார்.   2022இல் அமெரிக்க  ஜனநாயகக் கட்சிக்கு டாலர் 128.5 மில்லியன் நன்கொடை அளித்திருந்தார்.   அப்போது அமெரிக்க தேர்தலில் போட்டியிட்ட  பராக் ஒபாமாவின் அதிபர் பிரசாரத்தின் பின்னணியில்  செயல்பட்டு அவரது வெற்றிக்கு உதவியுதாகவும் கூறப்பட்டது.

இதுமட்டுமின்றி, வெளிநாட்டில் சட்டவிரோதமாக வருபவர்களுக்கு உதவி செய்து வந்ததாகவும் சோரஸ் மீது குற்றம் சாட்டப்பட்டது.  கடந்த 2019ஆம் ஆண்டில், ஹொண்டுராஸில் இருந்து ஆயிரக்கணக்கான அகதிகளுக்கு அமெரிக்க எல்லையை கடக்க சோரோஸ் பணம் கொடுத்ததாக,  தற்போதைய அமெரிக்க அதிபர், டிரம்ப் குற்றம் சாட்டியிருந்தார். மேலும்,  அவர் இந்தியா உள்பட   பல நாடுகளை இலக்காக வைத்து, அந்த நாடுகளின் அரசியலில் திரைமறைவாக செயல்பட்டு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தவும், தனது ஆதரவாளர்களின் ஆட்சியை கொண்டு முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் விமர்சிக்கப்பட்டு வந்தன. அதற்காக அவர் ஆண்டு  ஒன்றுக்கு  ரூ.12,000 கோடி வரை செலவிடுவதாகவும் கூறப்பட்டது.

 வங்கதேசத்தில் தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டதற்கும் இவர்தான் முக்கியக் காரணம் என்று கூறப்படுகிறது. அதுபோல நடைபெற்று முடிந்த 2024 நாடாளுமன்ற தேர்தலிலும் பாஜக ஆட்சியை அகற்றும்  வகையில் எதிர்க்கட்சிகளுக்கு மறைமுகமாக  நிதி உதவி வழங்கியதாகவும், அவரது அறிவுறுத்திலின் பேரிலேயே பைடன் அரசு, இந்தியாவில் வாக்கு வங்கியை அதிகரிக்கும் நோக்கில், ரூ.180 கோடியை வழங்கியது என்றும் கூறப்படுகிறது.

ஜோ பைடன் தலைமையிலான அமெரிக்க அரசு,  ஜார்ஜ் சோரோஸுக்கு ஜனாதிபதி பதக்க சுதந்திரத்தை வழங்கி கவுரவித்ததும் குறிப்பிடத்தக்கது.