வாஷிங்டன்: விசா காலம் முடிந்தும் அமெரிக்காவில் தங்கியுள்ள பாகிஸ்தானியர்கள் மற்றும் நாடுகடத்தப்பட்ட பாகிஸ்தானியர்களை ஏற்க மறுக்கும் பாகிஸ்தான் அரசின் செயலால், அந்நாட்டின் மீது தடைகளை விதித்துள்ளது அமெரிக்க அரசு.
மேலும், பாகிஸ்தானின் சீனியர் அதிகாரிகள் தொடங்கி, அந்நாட்டைச் சேர்ந்த பலரின் விசாக்களை நிறுத்தி வைக்கப்போவதாகவும் எச்சரித்துள்ளது.
அமெரிக்காவின் தடையால், பாகிஸ்தானிலுள்ள துணை தூதரகத்தின் நடவடிக்கைகளில் இதுவரை எந்த மாற்றமும் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேப் பிரச்சினையால், மொத்தம் 10 நாடுகளின் மீது அமெரிக்க நிர்வாகம் இதுவரை இந்தத் தடைகளை விதித்துள்ளது. இப்பட்டியலில், இந்தாண்டில் கானாவும், பாகிஸ்தானும் புதிய வரவாக இணைந்துள்ளன.
கடந்த காலங்களில், கயானா, காம்பியா, கம்போடியா, எரித்ரியா, கினியா, சியாராலியோன், பர்மா மற்றும் லாவோஸ் ஆகிய 8 நாடுகள் இப்பட்டியலில் ஏற்கனவே இணைந்துள்ளன.