எஃகு மற்றும் அலுமினிய பொருட்களுக்கான வரிகளை 25% உயர்த்த உள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.
அமெரிக்கா இறக்குமதி செய்யும் எஃகு மற்றும் அலுமினிய பொருட்களுக்கான இந்த வரி உயர்வு பிப்ரவரி 19ம் தேதி முதல் அமல்படுத்தப்படும் என்றும் கூறப்படுகிறது.
அரசு மற்றும் அமெரிக்க இரும்பு மற்றும் எஃகு நிறுவன தரவுகளின்படி, அமெரிக்க எஃகு இறக்குமதியின் மிகப்பெரிய ஆதாரங்கள் கனடா, பிரேசில் மற்றும் மெக்சிகோ, அதைத் தொடர்ந்து தென் கொரியா மற்றும் வியட்நாம்.
அமெரிக்காவுக்கு அலுமினிய உலோகத்தை வழங்கும் முதன்மை நாடாக கனடா உள்ளது, இது 2024 ஆம் ஆண்டின் முதல் 11 மாதங்களில் மொத்த இறக்குமதியில் 79 சதவீதமாகும். மெக்சிகோ அலுமினிய ஸ்கிராப் மற்றும் அலுமினிய அலாய் ஆகியவற்றின் முக்கிய சப்ளையர் ஆகும்.
அமெரிக்க அதிபராக மிக அதிக வயதில் (78 வயதில்) பதவியேற்றுள்ள டொனால்ட் டிரம்ப் அதிபராக பதவியேற்ற பின் பல்வேறு அதிரடி மாற்றங்களை அறிவித்துள்ளார்.
அதிக வரி விதிக்கும் நாடுகளுக்கு இணையாக அமெரிக்காவும் வரி விதிப்பை உயர்த்துவது உள்ளிட்ட அதிரடிகளை காட்டி வரும் அதேவேளையில் ஒரு சில அறிவிப்புகளை தற்காலிகமாக நிறுத்தியும் வைத்துள்ளார்.
தவிர, உள்நாட்டு அரசியலில் முன்னாள் அதிபர் ஜோ பைடனுக்கு வழங்கப்பட்டு வந்த உளவு தகவல்களை 82 வயதாகும் பைடனின் வயது மற்றும் தன்னிச்சையாக முடிவெடுக்கும் தன்மை இல்லாததை காரணம் காட்டி டிரம்ப் நிறுத்தி வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.