இலங்கை முழுவதும் பல்வேறு இடங்களில் நேற்று பிற்பகல் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக மின் தடை ஏற்பட்டது.

தெற்கு கொழும்புவின் புறநகர் பகுதியில் உள்ள ஒரு மின் நிலையத்தில் ஊடுருவிய குரங்கு ஒன்று டிரான்ஸ்பார்மரில் கோளாறு ஏற்படுத்தியதை அடுத்து இந்த மின்தடை ஏற்பட்டது.

“கிரிட் டிரான்ஸ்பார்மருடன் ஒரு குரங்கு தொடர்பு கொண்டதால், அமைப்பில் ஏற்றத்தாழ்வு ஏற்பட்டுள்ளது,” என்று எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி நிருபர்களிடம் தெரிவித்தார்.

குரங்கு சேட்டையால் இலங்கை முழுவதும் மின் தடை ஏற்பட்டதை அடுத்து பல மணி நேர போராட்டத்திற்குப் பின் ஒரு சில பகுதிகளில் மட்டும் மின்சாரம் வழங்கப்பட்டது.

இலங்கையின் பல இடங்களில் நேற்று இரவு வரை மின் தடை நீடித்தது.