ம்பர்க்:

 

மெரிக்க அதிபர் டொனால்டு  டிரம்ப் – ரஷ்ய அதிபர் புதின் இடையேயான நட்பு குறித்து பல்வேறு ஊகங்கள் வெளியாகி வந்த நிலையில், முதல் முறையாக இரு தலைவர்களும் நேருக்கு நேர் சந்தித்தனர்.

 

ஜெர்மன் நாட்டின்  ஹம்பர்க் நகரில் ஜி-20 நாடுகளின் கூட்டமைப்பு தொடங்கியது.  பயங்கரவாத ஒழிப்பு,  வெளிப்படையான வர்த்தகம் உள்ளிட்டவை குறித்து இந்த கூட்டத்தில் உலக தலைவர்கள் ஆலோசனை நடத்த இருக்கிறார்கள்.

 

இந்த மாநாட்டில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், ரஷிய அதிபர் விளாடிமிர் புதின், துருக்கி அதிபர் தையீப் எர்டோகன், இந்திய பிரதமர் மோடி உட்பட பலநாட்டு தலைவர்கள் கலந்துகொண்டுள்ளனர்.

 

ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்கல் இம்மாநாட்டை தொடங்கி வைத்தார்.

 

இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக வந்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ரஷிய அதிபர் விளாடிமிர் புதினை சந்தித்து கைகுலுக்கினார். இருவரும் சந்தித்தது குறித்த தனது மகிழ்ச்சியை தெரிவித்தார்.

 

டொனால்டு டிரம்ப்-புதின் இடையேயான நட்பு குறித்து பல்வேறு ஊகங்கள் வெளியாகி வந்த நிலையில், முதல் முறையாக இரு தலைவர்களும் நேருக்கு நேர் சந்தித்துக்கொண்டு கை குலுக்கியது முதல் சந்திப்பு வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வாக கருதப்படுகிறது.

 

மேலும் ஜெர்மனி நேரப்படி பிற்பகல்  இரு தலைவர்களும் தனியாக சந்தித்து பேச இருக்கிறார்கள்.  இந்த சந்திப்பின் போது, இருநாடுகளுக்கு இடையில் நிலவிவரும் பல்வேறு பிரச்சனைகள் தொடர்பாக விவாதிப்பார்கள் என்று தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.