லண்டன்: இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் இறுதிச் சடங்கு குறித்த தேதி இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாத நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இறுதிச்சடங்கில் கலந்துகொள்வார் என அமெரிக்கா அறிவித்துள்ளது.
96வயதான இங்கிலாந்து நாட்டின் இரண்டாவது ராணி எலிசபெத் உடல்நலக் குறைவு காரணமாக நேற்று முன்தினம் (செப்டம்பர் 7ந்தேதி) காலமானார். எலிசபெத் ராணியின் மறைவுக்கு உலக தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவரது இறுதிச்சடங்கு 10 நாட்கள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதில் பல நாட்டு அதிபர்கள் கலந்துகொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றனர்.
இந்த நிலையில், ராணி எலிசபெத் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள அதிபர் டைடன், இங்கிலாந்து ராணி 2-வது எலிசபெத் ஒரு சகாப்தத்தினை வரையறுத்தவர். ஒரு சிறந்த பெண்மணி என்று புகழாரம் சூட்டியுள்ளார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பைடன் பேசும்போது, இங்கிலாந்து ராணி 2-வது எலிசபெத்தின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்வீர்களா? என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்தவர், ஆம் என்றும், நான் செல்வேன் என்றும் பதில் கூறினார். மேலும், நான் இன்னும் அரசர் சார்லஸிடம் பேசவில்லை. அவரை நான் அறிவேன். அவரிடம் இன்னும் தொடர்பு கொள்ளவில்லை என கூறினார்.
இங்கிலாந்து ராணி 2-வது எலிசபெத் உடல் அடக்கம் தொடர்பான இறுதி சடங்கிற்கான ஏற்பாடுகள் பற்றி இங்கிலாந்து அரண்மனை தகவல் தெரிவித்த பின்னர், அதில் கலந்து கொள்வது பற்றி அறிவிக்க பைடன் திட்டமிட்டு உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.