சீனா மற்றும் ஹாங்காங்கிலிருந்து உள்நாட்டிற்கு வரும் பார்சல்களை ஏற்றுக்கொள்வதை அமெரிக்க தபால் சேவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கும் என்று USPS வலைத்தளம் தெரிவித்துள்ளது.

பிப்ரவரி 4 முதல் அமலுக்கு வரும் இந்த மாற்றம், சீனா மற்றும் ஹாங்காங்கிலிருந்து வரும் கடிதங்கள் மற்றும் ‘புக் போஸ்ட்’களை பாதிக்காது என்று வலைத்தளம் தெரிவித்துள்ளது.

சீனாவுக்கு எதிராக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வர்த்தக போரை துவங்கியுள்ள நிலையில் USPSன் இந்த நடவடிக்கை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் அமெரிக்க அதிபரின் முடிவுக்கும் இந்த நடவடிக்கைக்கும் உள்ள தொடர்பு குறித்து USPS உடனடியாக கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.

கனடா, மெக்ஸிகோ மற்றும் சீனா மீது வரி விதிப்பை உயர்த்தியுள்ள டிரம்ப், கனடா மற்றும் மெக்ஸிகோ மீதான வரி விதிப்பை மட்டும் 30 நாட்களுக்கு இடைநிறுத்தம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சீனாவுக்கு 10 சதவீதம் வரியை உயர்த்தியுள்ள அமெரிக்கா, நேற்று முதல் அதனை அமல்படுத்தியுளளது.