அமெரிக்கா பாகிஸ்தானை விரைவில் தீவிரவாத நாடாக அறிவிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பான மசோதா அமெரிக்க பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்ப்ட்டுள்ளது
பாகிஸ்தானை தீவிரவாதத்தை ஊக்குவிக்கும் நாடுகள் பட்டியலில் சேர்க்கும் ஹெச்.ஆர் 6069 என்ற மசோதாவை அமெரிக்க பாராளுமன்றத்தில் செல்வாக்குமிக்க குடியரசு கட்சி உறுப்பினர் டெட் போ மற்றும் ஜனநாயக கட்சி உறுப்பினர் டனா ரோஹ்ராபச்சர் ஆகியோர் தாக்கல் செய்துள்ளனர்.

pakterror

ஹக்கானி தீவிரவாத குழுக்களை ஆதரிப்பது, பின்லேடனுக்கு அடைக்கலமளித்தது ஆகிய காரணங்களை சுட்டிக்காட்டி. பாகிஸ்தான் ஆரம்பத்திலிருந்தே கூட இருந்து குழுபறிக்கும் நாடாகவே நம்முடன் இருந்து வந்திருக்கிறது. அது நம்பிக்கைக்குரிய நாடு அல்ல. தீவிரவாதத்தை நேரடியாகவும் மறைமுகமாகவும் ஊக்குவிக்கும் அந்த நாட்டை ஏன் உடனடியாக தீவிரவாதத்தை ஊக்குவிக்கும் நாடுகளின் பட்டியலில் சேர்க்கக்கூடாது என்று அவர்கள் வினவியுள்ளனர்.
சர்வதேச தீவிரவாதத்துக்கு பாகிஸ்தான் துணை போகிறதா? இல்லையா? என இன்னும் 90 நாட்களுக்குள் அதிபர் பராக் ஒபாமா அறிக்கை வெளியிட வேண்டும் எனவும் அவர்கள் கோரியுள்ளனர்.
எனவே பாகிஸ்தானின் முகமூடி வெகு விரைவில் சர்வதேச அரங்கில் கிழிக்கப்படும் என்று எதிர்பார்க்கலாம்.