இன்றைய செய்திகள்!

Must read

ஹாலிவுட் நட்சத்திரம், ஏஞ்சலீனா ஜோலி தனது கணவர் பிராட் பிட்டிடமிருந்து விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்துள்ளார் என்று ஏஞ்சலீனா ஜோலியின் வழக்கறிஞர் உறுதி செய்துள்ளார்
angelina-jolie-hd
அமெரிக்காவில் கடந்த நாற்பது வருடங்களில் கருப்பு மற்றும் வெள்ளை இன பணியாளர்களுக்கிடையே உள்ள ஊதிய வித்தியாசம்,குறிப்பிடத்தக்க வகையில் அதிகரித்துள்ளது என்று அமெரிக்க பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்
உள்ளாட்சித் தேர்தல்: அக்.1-க்குள் “பூத் சிலிப்’ அச்சிட உத்தரவு உள்ளாட்சித் தேர்தலில் பயன்படுத்தப்பட உள்ள வாக்குச்சாவடி சீட்டுகளை அச்சிடும் பணியை அக்டோபர் 1-ஆம் தேதிக்குள் முடிக்க மாநிலத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் நீக்கம். அதிமுகவைச் சேர்ந்த தகவல் தொழில்நுட்பப் பிரிவு நிர்வாகிகள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இதற்கான அறிவிப்பை முதல்வரும், கட்சியின் பொதுச் செயலாளருமான ஜெயலலிதா செவ்வாய்க்கிழமை வெளியிட்டார். அதன் விவரம்: அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவுத் தலைவர் ஆர்.பாலு, துணைத் தலைவர்கள் என்.ஷர்மிளா வினோத்குமார், கே.அன்புச் செழியன், துணைச் செயலாளர் கே.கார்த்திக் உள்ளிட்ட நிர்வாகிகள் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்கள் எனத் தெரிவித்துள்ளார். முதல்வர் ஜெயலலிதா வெளியிட்ட மற்றொரு அறிவிப்பில், திருப்பூர் புறநகர் மாவட்டம் கண்டியகவுண்டனூர் கிளைக் கழகச் செயலாளர் வி.முத்துசாமி சாலை விபத்தில் மரணம் அடைந்தார். அவரது குடும்பத்துக்கு அதிமுக சார்பில் நல நிதியாக ரூ.3 லட்சம் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.
மேட்டூர் அணையின் நீர் இருப்பு 45 நாள்களுக்கு மட்டுமே போதுமானது மேட்டூர் அணையின் நீர் இருப்பு சம்பா சாகுபடிக்கு 45 நாள்களுக்கு மட்டுமே போதுமானதாக உள்ளது.
மேட்டூர் அணையிலிருந்து சம்பா சாகுபடிக்காக செவ்வாய்க்கிழமை முதல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. தொடக்கத்தில் நொடிக்கு 2 ஆயிரம் கனஅடி வீதம் திறக்கப்பட்ட தண்ணீர் மாலையில் நொடிக்கு 12 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நாள் ஒன்றுக்கு ஒரு டி.எம்.சி தண்ணீர் திறக்கப்படுகிறது.
தற்போது மேட்டூர் அணையில் 50 டி.எம்.சி தண்ணீர் மட்டுமே இருப்புள்ளது. இதில் 9.5 டி.எம்.சி. தண்ணீரை நீர்த்தேக்கத்தில் உள்ள மீன்களைப் பாதுகாக்கவும் குடிநீர்த் திட்டங்களுக்கும் இருப்பு வைத்துக் கொள்ள வேண்டும். மீதம் உள்ள 40 டி.எம்.சி தண்ணீரும் கர்நாடகம் நொடிக்கு 3 ஆயிரம் கனஅடி வீதம் திறக்கும் தண்ணீரும் இன்னும் 45 நாள்களுக்கு மட்டுமே பாசனத்திற்குப் போதுமானதாக இருக்கும்.
மாநகராட்சி திட்டங்களைமுதல்வர் துவக்கி வைக்கிறார். சென்னை;மணலி சாலை, எண்ணுார் நெடுஞ்சாலை மேம்பால பணிக்கு இன்று அடிக்கல் நாட்டும் முதல்வர் ஜெயலலிதா, புதிய மாநகராட்சி கட்டடங்களை திறந்து வைக்கிறார்.உள்ளாட்சி தேர்தல் அறிவிப்புக்கு முன், சென்னை மாநகராட்சி சார்பில், சில முக்கிய திட்ட பணிகள் செயல்பாட்டிற்கு வர உள்ளன. அதில், வடசென்னையின் போக்குவரத்து நெரிசலை தீர்க்கும் வகையில், 117 கோடி ரூபாய் செலவில், கட்டப்பட உள்ள எண்ணுார் நெடுஞ்சாலை, மணலி சாலை மேம்பாலம் முக்கிய திட்டமாகும்.அந்த பால திட்டத்திற்கு ஒப்பந்தம் அறிவித்து, பணி ஆணை வழங்கப்பட்ட நிலையில், இன்று நடைபெறும் நிகழ்ச்சியில், காணொலி காட்சி மூலம் முதல்வர் ஜெயலலிதா இந்த திட்டத்திற்கு அடிக்கல் நாட்டுகிறார்.
பின், மாநகராட்சி புதிதாக கட்டியுள்ள லாரி நிலையம், வார்டு அலுவலகம், மருத்துவமனை கட்டடம், சமுதாயக்கூடம், புதிய அம்மா உணவகங்கள் ஆகிய, 34 கட்டடங்களை திறந்து வைக்கிறார்.இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் சென்னை மாநகராட்சி நிர்வாகத்தால் செய்யப்பட்டுள்ளன.
கீழ்க்கட்டளை பேருந்து நிலையத்தில் இருக்கை வசதியின்றி தவிக்கும் பயணிகள் சென்னை: கீழ்க்கட்டளை பேருந்து நிலையத்தில் இருக்கை வசதிகள் இல்லாததால் தரையில் அமர்ந்தும், நீண்ட நேரம் நின்று கொண்டும் பஸ்சுக்காக பயணிகள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
நீதிமன்ற உத்தரவை அமல்படுத்துவது கஷ்டம்… முதல்வர் சித்தராமையா! பெங்களூரு: காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவை அமல்படுத்துவது கஷ்டம் என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்து உள்ளார்.
 
ஏடிஎம் ரகசிய எண்ணை யாரிடமும் பகிர வேண்டாம் – காவல்துறை எச்சரிக்கை சென்னை: ஏடிஎம் ரகசிய எண்ணை யாரிடமும் பகிர வேண்டாம் என புதுச்சேரி சிபிசிஐடி போலீஸ் எஸ்பி ஆறுமுகம் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் ஜம்மு-காஷ்மீர் மாநிலம், உரியில் உள்ள ராணுவப் படைத் தலைமையகம் மீது தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்குத் தக்க பதிலடி கொடுக்கப்படும் என, பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன் தெரிவித்தார்.
இன்றும் மழை நீடிக்கும்/ தமிழகத்தில் இடியுடன் கூடிய மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள மேலடுக்கு சுழற்சியின் காரணமாக, தமிழகத்தில் மழை பெய்து வருகிறது.தங்கம் பவுனுக்கு ரூ.32 அதிகரிப்பு. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமை பவுனுக்கு ரூ.32 உயர்ந்து, ரூ.23,672-க்கு விற்பனை ஆனது. சர்வதேச சந்தையில் அவ்வப்போது ஏற்படும் மாற்றத்தின் காரணமாக தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கங்கள் காணப்பட்டு வருகிறது. இந்நிலையில் 2-ஆவது நாளாக செவ்வாய்க்கிழமை தங்கம்,வெள்ளியின் விலையில் ஏற்றம் காணப்பட்டது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமை மாலை நிலவரப்படி கிராமுக்கு ரூ.4 அதிகரித்து, ரூ.2,959-க்கு விற்பனையானது.
வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.315 அதிகரித்து, ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ.46,425-க்கு விற்பனையானது.
வி.எச்.பி. பிரமுகர் படுகொலை: ஒசூரில் கடைகள் அடைப்பு ஒசூரில் படுகொலை செய்யப்பட்ட தமிழ்நாடு விசுவ ஹிந்து பரிஷத் அமைப்பின் மாவட்டச் செயலர் சூரி (எ) சுரேஷின் உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகு அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்தப் படுகொலையைத் தொடர்ந்து திங்கள்கிழமை இரவு முதல் செவ்வாய்க்கிழமை இரவு வரை ஒசூரில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.
கர்நாடக தலைவர்களுக்கு ராமதாஸ் கண்டனம் காவிரியிலிருந்து ஒரு சொட்டுத் தண்ணீர் கூட தமிழகத்துக்குத் திறந்து விட முடியாது என்று கூறி வரும் கர்நாடக அரசியல் கட்சித் தலைவர்களுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ்கண்டனம் தெரிவித்துள்ளார்.
காஷ்மீரில் வீரமரணமடைந்தோர் குடும்பத்துக்கு ரூ.11 லட்சம். ஜம்மு-காஷ்மீர் மாநிலம் உரி பகுதியில் பயங்கரவாதிகளுடன் நேரிட்ட மோதலில் வீரமரணமடைந்த பிகாரைச் சேர்ந்த 3 ராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.11 லட்சம் அளிக்கப்படும் என்று அந்த மாநில முதல்வர் நிதீஷ் குமார் அறிவித்தார்.
ஜம்மு எல்லைப் பகுதிகளில் கூடுதல் உஷார் நிலை: துணைத் தளபதி உத்தரவு. ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய சூழலில், ஜம்மு எல்லைப் பகுதிகளில் கூடுதல் உஷார்நிலையில் இருக்க வேண்டும் என்று பாதுகாப்புப் படையினருக்கு ராணுவத் துணைத் தளபதியும், மேற்குப் படைப்பிரிவு கமாண்டருமான சுரீந்தர் சிங் உத்தரவிட்டுள்ளார்.
பலாத்காரம் – கொலை செய்யப்பட்ட செளமியா குடும்பத்தினருக்கு நியாயம் கிடைப்பதில் உதவி. ஓடும் ரயிலில் இருந்து தள்ளி, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு உயிரிழந்த கேரள இளம் பெண் செளமியாவின் குடும்பத்தினருக்கு நியாயம் கிடைக்கச் செய்வதில்உதவியளிப்பதாக கேரள முதல்வர் பினரயி விஜயன் உறுதியளித்தார்.
பாகிஸ்தான் பயங்கரவாதிகள் 10 பேர் சுட்டுக் கொலை: காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு. பாகிஸ்தானில் இருந்து ஜம்மு – காஷ்மீர் மாநிலம், உரி பகுதிக்குள் ஊடுருவ முயன்ற பயங்கரவாதிகள் 10 பேரை பாதுகாப்புப் படையினர் செவ்வாய்க்கிழமை சுட்டுக் கொன்றனர்.
மூளைச் சாவு அடைந்த காவலரின் உடல் உறுப்புகள் தானம் மூளைச் சாவு அடைந்த கடலூர் காவலரின் உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டன.
ஒடிசாவில் பேருந்து மீது மின்சாரம் பாய்ந்து விபத்து: இறந்தவர்களுக்கு ரூ.2 லட்சம் இழப்பீடு ஒடிசா: ஒடிசா மாநிலம் தென்கனல் மாவட்டத்தில் ஒரு பேருந்து மீது மின்சாரம் பாய்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 6 பேர் காயமடைந்துள்ளனர் மற்றும் 25 பேர் காயமடைந்துள்ளனர். இதனையடுத்து ஒடிசா முதல்வர் இறந்தவர்களுக்காக ரூ.2 லட்சம் இழப்பீட்டை அறிவித்துள்ளார்.
8 வருடத்தில் 7 கல்யாணம்.. மிரட்டிய பெங்களூரு பெண்: புகார்களுடன் கிளம்பி வந்த 3 கணவர்கள்.  பெங்களூரு: பெங்களூரைச் சேர்ந்த 38 வயதுப் பெண் 8 வருடத்தில் 7 பேரைத் திருமணம் செய்து பெரும் மோசடியில் ஈடுபட்டுள்ளார்.
ஜம்மு-காஷ்மீரில் நேற்று தொடங்கியது லடாக் திருவிழா. ஜம்மு-காஷ்மீர்: ஜம்மு-காஷ்மீர் மாநிலம் லெஹ்-ல் லடாக் திருவிழா நேற்று தொடங்கியது. இந்த திருவிழாவில் பல்வேறு கண்டங்களில் இருந்து கலாச்சார குழுக்கள் கலந்து கொண்டனர். இவ்விழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டு விழாவை கண்டு ரசித்தனர்.
அதிக இடர்களை சந்திக்கும் சிறு, குறு நிறுவனங்கள் புதுடில்லி : ”சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களை ஊக்குவிக்க, மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது,” என, மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்
பெண் தொழில் முனைவோர் பெருகணும்: அமிதாப் காந்த் மும்பை : ”இந்தியாவில், பெண் தொழில் முனைவோர்களின் பங்களிப்பு குறைவாக உள்ளது; அவர்கள் தொழில் துவங்க, ஆர்வத்துடன் முன்வர வேண்டும்,” என, ‘நிடி ஆயோக்’ தலைமை செயல் அதிகாரி அமிதாப் காந்த் தெரிவித்து உள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் வெடிகுண்டு சோதனை சென்னை : சென்னை விமான நிலையத்தில் கிடந்த 2 மர்ம பைகளால் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து அங்கு வெடிகுண்டு சோதனை நடத்தப்பட்டு வருகிறது.சென்னை உள்நாட்டு விமான நிலைய முனைய நுழைவு வாயில் அருகே 2 மர்ம பைகள் கேட்பாரற்று கிடந்துள்ளன. இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது. மர்ம பைகளில் வெடிகுண்டுகள் ஏதும் உள்ளதா என்ற சந்தேகம் எழுந்தது. இதனையடுத்து மத்திய பாதுகாப்பு படையினர், வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு சோதனை இடப்பட்டு வருகிறது. அதிகாலையில் கிடந்த மர்ம பை காரணமாக சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
காவிரி விவகாரம் : இன்று அவசரமாக கூடுகிறது கர்நாடக அமைச்சரவைபெங்களூரு : காவிரியில் இன்று (செப்.,21) முதல் தமிழகத்திற்கு நாள்தோறும் 6000 கனஅடி நீர் திறந்து விட வேண்டும் என சுப்ரீம் கோர்ட், கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. நேற்று நடந்த காவிரி நதிநீர் வழக்கு விசாரணையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.ஆனால், சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை நடைமுறைப்படுத்துவது சிக்கலான விஷயம் எனவும், சுப்ரீம் கோர்ட் உத்தரவு குறித்து அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டி ஆலோசித்து முடிவெடுக்க உள்ளதாகவும் கர்நாடக முதல்வர் சித்தராமைய்யா தெரிவித்துள்ளார்.

 • கர்நாடகாவுக்கு லாரிகளை இயக்க அனுமதிக்கக் கோரி போராட்டம்: போலீசார் தடியடி. காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடக் கூடாது என்று கன்னட அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன.
 • சென்னை விமானநிலையம் – சின்னமலை இடையே மெட்ரோ ரயில் சேவை: காணொலி மூலம் தொடங்கி வைக்கிறார் ஜெயலலிதா
 • சென்னை: சென்னை விமானநிலையம் – சின்னமலை இடையேயான மெட்ரோ ரயில் சேவையை முதல்வர் ஜெயலலிதா இன்று தொடங்கி வைக்கிறார்.
 • இன்று 2-ஆம் கட்ட மருத்துவக் கலந்தாய்வு: இணையதளத்தில் அட்டவணை வெளியீடு சென்னை: தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளில் சேருவதற்கான 2 -ஆம் கட்ட கலந்தாய்வு சென்னையில் புதன்கிழமை தொடங்கியது
 • கூட்டணியில் தமாகா? திமுக தெளிவுபடுத்திய பின்னர் காங்கிரஸின் நிலைப்பாடு அறிவிப்பு: சு.திருநாவுக்கரசர் சென்னை: கூட்டணியில் தமாகா இடம்பெறுமா என்பது குறித்து திமுக தெளிவுபடுத்தியதற்குப் பின்னர், காங்கிரஸின் நிலையை அறிவிப்போம் என்று காங்கிரஸ் மாநிலத் தலைவர் சு.திருநாவுக்கரசர் கூறினார்.
 • ஐஐஎம்-களில் மாணவர் இடங்களை அதிகரிக்க மத்திய அரசு திட்டம் ஷில்லாங்: இந்திய நிர்வாகயியல் பயிலகங்களில் (ஐஐஎம்) மாணவர் சேர்க்கை இடங்களை அதிகரிப்பது தொடர்பான திட்டங்களை சமர்ப்பிக்கும்படி அக்கல்வி நிறுவனங்களிடம் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.
 • நாகை அருகே கொன்று புதைக்கப்பட்டவரின் சடலம் தோண்டியெடுப்பு: ஒன்றரை ஆண்டுகளுக்குப் பின் துப்புத் துலங்கியது நாகை அருகே ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு காணாமல்போனவர், கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டிருந்தது தெரியவந்ததையடுத்து, அவரது சடலம் செவ்வாய்க்கிழமை தோண்டியெடுக்கப்பட்டது.
 • குஜராத்தில் பிளாஸ்டிக் தொழிற்சாலையில் தீ விபத்து குஜராத்: குஜராத் மாநிலம் சூரத்தின் கிம் பகுதியில் பிளாஸ்டிக் தொழிற்சாலையில் இன்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு 15க்கும் மேற்பட்ட தீயணைப்பு வண்டிகளுடன் வந்த வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
 • பாக்., பயங்கரவாத நாடு : அமெரிக்காவில் தீர்மானம் வாஷிங்டன் : பாகிஸ்தானை பயங்கரவாத ஆதரவு நாடாக அறிவிக்கும் தீர்மானத்தை அமெரிக்க எம்.பி.,க்கள் இருவர் கொண்டு வந்துள்ளனர். இது ஐ.நா.,வில் மனிதநேயம் குறித்து பாக்., பிரதமர் நவாஸ் ெஷரீப் பேசுவதற்கு தீர்மானத்துள்ள உரைக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.காஷ்மீரில் கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக நீடித்து வரும் பதற்றம் தொடர்பாக ஐ.நா., சபையில் பேச பாக்., பிரதமர் நவாஸ் ெஷரீப் முடிவு செய்துள்ளார். காஷ்மீரில் இந்திய ராணுவம் மனிதஉரிமை மீறலில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் குற்றம்சாட்ட தீர்மானத்துள்ளார். இந்நிலையில் பாக்.,க்கு எதிராக அமெரிக்கா தீர்மானம் கொண்டு வந்துள்ளது. எம்.பி.,க்கள் கொண்டு வந்துள்ள இந்த தீர்மானம் தொடர்பாக அமெரிக்க நிர்வாகம் 4 மாதங்களுக்குள் முடவிவை அறிவிக்க வேண்டும்.சர்வதேச பயங்கரவாதத்திற்கு பாகிஸ்தான் ஆதரவு அளிக்கிறதா, இல்லையா என்பது பற்றி 90 நாட்களுக்குள் அமெரிக்க அதிபர் விரிவான அறிக்கையை அளிப்பார்.
 • இந்த அறிக்கையின் அடிப்படையில் அடுத்த 30 நாட்களில் அமெரிக்க பாதுகாப்பு துறை , பாக்., பயங்கரவாத ஆதரவு நாடா என்பது பற்றிய அறிவிப்பை வெளியிடுவார். அமெரிக்க எம்.பி,க்கள் கொண்டு வந்துள்ள தீர்மானத்தில் பாக்., மட்டுமின்றி இஸ்லாமாத் பல ஆண்டுகளாக ஒசாமா பின்லேடன் உள்ளிட்ட அமெரிக்க எதிரிகள் பலருக்கு புகழிடம் அளித்து வருவதாகவும், பயங்கவாத போருக்கு ஆதுரவு அளித்து வருவதாகவும், இதற்கு பல ஆதாரங்கள் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 • உரி பகுதியில் மீண்டும் பயங்கரவாதிகள் தாக்குதல், புதுடில்லி : காஷ்மீரின் யூரி பகுதியில் ராணுவ முகாமிற்குள் கடந்த வாரம் ஊடுருவிய பயங்கரவாதிகள், பயங்கர தாக்குதல் நடத்தினர். இதில் ராணுவ வீரர்கள் 18 பேர் உயிரிழந்தனர். ராணுவ முகாமிற்குள்ளேயே பயங்கரவாதிகள் நுழைந்து, தாக்குதல் நடத்தி இருக்கும் சம்பவம் இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.இந்நிலையில் இந்த தாக்குதல் நடந்து முடிந்த 18 மணி நேரத்திற்கு பிறகு மீண்டும் யூரி பகுதியில் இன்று அதிகாலை பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி உள்ளனர். இதில் ராணுவ வீரர்கள் ஒருவர் பலியாகி உள்ளார். பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதிகள் இந்த தாக்குதலில் ஈடுபட்டிருப்பது தெரிய வந்துள்ளது. தொடர்ந்து அப்பகுதியில் துப்பாக்கிச் சண்டை நடந்து வருகிறது.
 • அப்பகுதியில் பல பயங்கரவாதிகள் பதுங்கி இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளதால் தொடர்ந்து அங்கு தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.
 • மைசூரில் விவசாயிகள் போராட்டம் மைசூர்: காவிரியில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் விடுவதை எதிர்த்து மைசூரில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மைசூர் சாலையில் விவசாயிகள் கழுத்தில் தூக்குக் கயிறை மாட்டி நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
 • கர்நாடகத்தில் தொடர் போராட்டம்: 10வது நாளாக போக்குவரத்து நிறுத்தம் ஓசூர்: கர்நாடகத்தில் தொடர் போராட்டம் காரணமாக 10வது நாளாக போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. முறையான பேருந்து இயக்க கோரி இருமாநில அரசுகளுக்கும் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 • இந்திய கிரிக்கெட் வாரியத்தின் பி.சி.சி.ஐ. 87வது பொதுக்குழு கூட்டம் மும்பையில் இன்று கூடுகிறது
 • பாகிஸ்தானை பயங்கரவாத நாடாக அறிவிக்க வேண்டும் என்று சீக்கிய அமைப்பான தேரா சச்சா சௌதாவின் தலைவர் ராம் ரஹீம் சிங் வலியுறுத்தியுள்ளார்.
 • சென்னை வந்த ரயிலில் ரூ.5.75 கோடி கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து விசாரிக்க, சிபிசிஐடி தனிப்படை மும்பை விரைந்துள்ளது.
 • ராம்குமார் தற்கொலை தொடர்பாக சிறைத்துறை தலைவர், மனித உரிமை ஆணையர் ஆகியோர் புழல் சிறையில் விசாரணை நடத்தினர்.ராம்குமார் அவரது அறையில் இருந்து வெளியே சென்றது ஏன், மற்றும் சிறையிலேயே அவர் இறந்துவிட்டாரா அல்லது மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தாரா என்று மனித உரிமை ஆணையரும், சிறைத்துறை ஏடிஜிபியும் புழல் சிறை அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பியதாக கூறப்படுகிறது.
 • சவுதி அரேபியாவில் வாடும் 72 இந்தியர்களை மீட்க நடவடிக்கை எடுங்கள் என்று மத்திய அரசுக்கு கேரளா முதல்வர் பினராய் விஜயன் வலியுறுத்தியுள்ளார்.
 • திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் கடந்த ஜூலை மற்றும் ஆகஸ்ட் ஆகிய இரண்டு மாதங்களாக காணிக்கையாக வழங்கிய முடி ரூ.17.82 கோடிக்கு ஏலம் விடப்பட்டுள்ளது.
  ஜூலை மாதம் முடி ரூ.11.88 கோடிக்கும், ஆகஸ்ட் மாதம் முடி ரூ.5.94 கோடிக்கும் ஏலம் சென்றதாக திருப்பதி தேவஸ்தான் மூத்த அதிகாரிகள் தெரிவித்தனர்
 • தலைமை செயலக விழாவில் முதலமைச்சர் 200 பேருந்துகள் சேவையை கொடியசைத்து தொடங்கிவைத்தார். ஆர்.கே.நகர் தொகுதிக்கு 3′ மகளிர் மட்டும்’ பேருந்துகள் சேவையை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.
 • கொங்கு ஈஸ்வரன் திமுக ஸ்டாலின் சந்திப்பு
 • ராம்குமார் பிரேதபரிசோதனை வழக்கை விசாரிக்க 3வது நீதிபதி கிருபாகரன் நியமனம். இன்று பிற்பகல் விசாரணைக்கு வருகிறது.
 • திருச்சியில் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் பேட்டி – மத்திய அரசு நடுநிலையோடு குறிப்பிட்ட காலகெடுவுக்குள் காவேரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும், ராம்குமார் தற்கொலை விவகாரத்தில் உயர்நீதி மன்ற நீதிபதி தலைமையில் விசாரணை மேற்கொண்டு உண்மை நிலையை கண்டறிய வேண்டும், கர்நாடக அமைச்சர்க
 • புருண்டியில், குறிப்பாக அரசின் முகவர்களால் மிகப்பெரிய அளவில், மனித உரிமை மீறல்கள் நடத்தப்பட்டது என்று நிபுணர்கள் குழு கண்டறிந்துள்ளது.
 • ஐக்கிய நாடுகள் சபையில் நிகழ்த்திய தனது இறுதி உரையில் அமெரிக்க அதிபர் ஒபாமா, உலக நாடுகளுக்கு இடையில் கூடுதலான அளவில் வெளிப்படைத் தன்மை மற்றும் ஒத்துழைப்பு வேண்டி அழைப்பு விடுத்துள்ளார்
 • மோசடி மற்றும் லஞ்ச குற்றச்சாட்டுகள் குறித்து தகவல் தருபவர்களுக்கு வெகுமதியளிக்க வழிவகை செய்யும் ஊழல் எதிர்ப்பு சட்டமொன்றை பாகிஸ்தானில் உள்ள மாகாணமொன்று அந்நாட்டில் முதல்முறையாக அறிமுகம் செய்யவுள்ளது
 • சிவில் சமூக அமைப்புக்கள், தொழிற்சங்கங்கள் மற்றும் தமிழ் அரசியல் கட்சிகளை உள்ளடக்கிய தமிழ் மக்கள் பேரவை வரும் 24 ஆம் தேதிசனிக்கிழமை யாழ்ப்பாணத்தில் நடத்தவுள்ள பேரணியில் இலங்கைத் தமிழரசுக் கட்சி கலந்து கொள்ளாது என அறிவிக்கப்பட்டுள்ளது
 • சென்னை விமானநிலையத்தில் கேட்பாரற்று கிடந்த 2 பைகளில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தி வருகின்றனர். உள்நாட்டு முனைய பகுதியில் கிடந்த பைகளில் வெடிகுண்டு எதுவும் உள்ளதா என சோதனை நடத்துகின்றனர்
 •  ஜம்மு-காஷ்மீர்: ஜம்மு-காஷ்மீர் மாநிலம் லெஹ்-ல் லடாக் திருவிழா நேற்று தொடங்கியது. இந்த திருவிழாவில் பல்வேறு கண்டங்களில் இருந்து கலாச்சார குழுக்கள் கலந்து கொண்டனர். இவ்விழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டு விழாவை கண்டு ரசித்தனர்
 • காவிரியில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிட உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதை அடுத்து கர்நாடகா, பெங்களூரில் உள்ள மைசூர் சாலையில் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். காவிரி எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக தங்கள் கழுத்தைக் சுருக்கிக் கட்டி கொண்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்
 • சென்னை விமான நிலையம்-சின்னமலை இடையே மெட்ரோ ரயில் சேவை விரைவில் தொடங்கப்பட உள்ளது. இதற்கான சோதனை ஓட்ட விமான நிலையம் – சின்னமலை இடையே நடைபெறுகிறது
 • ஒடிசா மாநிலம் தென்கனல் மாவட்டத்தில் ஒரு பேருந்து மீது மின்சாரம் பாய்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 6 பேர் காயமடைந்துள்ளனர் மற்றும் 25 பேர் காயமடைந்துள்ளனர். இதனையடுத்து ஒடிசா முதல்வர் இறந்தவர்களுக்காக ரூ.2 லட்சம் இழப்பீட்டை அறிவித்துள்ளார்*
 • மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 10,093 கனஅடியில் இருந்து 8,144 கனஅடியாக குறைந்துள்ளது. அணையின் நீர்மட்டம் 87.62 அடியாகவும், நீர் இருப்பு 49.97 டிஎம்சியாகவும், பாசனத்துக்காக நீர் இருப்பு 12,000 கனஅடியாகவும் உள்ளது
 • சென்னை: கீழ்க்கட்டளை பேருந்து நிலையத்தில் இருக்கை வசதிகள் இல்லாததால் தரையில் அமர்ந்தும், நீண்ட நேரம் நின்று கொண்டும் பஸ்சுக்காக பயணிகள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது*
 • சென்னை: கோயம்பேடு தாசில்தார் அலுவலகம் முன்பு பட்டா வழங்கக் கோரி கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு  ஏற்பட்டது.
 • சாம்ராஜ்நகர் மாவட்டம் கொள்ளேகால் தாலுகா மதுவனஹள்ளியை சேர்ந்தவர் சுந்தர் (24). திருமணமான இவர் சம்பவத்தன்று தொட்டிந்துவாடியில் உள்ள தனது மனைவியை பார்த்து விட்டு மீண்டும் மதுவனஹள்ளிக்கு திரும்பி கொண்டிருந்தார். அவர் சிக்க இந்துவாடி அருகே வந்த போது எதிரே வந்த மணல் லாரி பைக் மீது பலமாக மோதியது. இதில் பலத்த காயம் அடைந்தவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சம்பவம் தொடர்பாக சப்-இன்ஸ்பெக்டர் மோகித் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்
 • டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா மீது மை வீசிய வழக்கில் கைதான பிரிஜேஷ் சுக்லாவை இன்று வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். வெளிநாட்டு பயணம் முடிந்து டெல்லி  திரும்பிய சிசோடியா, துணை நிலை ஆளுனர்  நஜீப் ஜங்கை நேற்று முன்தினம் சந்தித்தார். ஆளுனருடன் பேசிவிட்டு வெளியில் வந்த  சிசோடியா தனது காரில் ஏற முயன்ற போது, அவர் மீது ஒருவர் மை  வீசினார். அவரை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். சுக்லாவை  இன்றுவரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்
 • சென்னை அண்ணா சாலையில் உள்ள எல்.ஐ.சி கிளை அலுவலகத்தில் தீவிபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க போராடி வருகின்றனர்
 • உச்சநீதிமன்ற உத்தரவுப்படி தண்ணீர் விடாவிட்டால் கர்நாடக அரசு மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் என பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். போராட்டங்களும் தேவைகளும் அதிகரித்துள்ளதால் காவிரி வேளாண்மை வாரியம் அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது என சென்னை விமான நிலையத்தில் மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்
 • சேலம் ஏ.டி.எம்.,மில் கொள்ளை முயற்சி
 • பி.சி.சி.ஐ., பொதுக்குழு கூட்டம் மும்பையில் இன்று கூடுகிறது
 • திருவள்ளூர்: வீட்டின் பூட்டை உடைத்து 160 பவுன் நகை கொள்ளை
 • மேட்டூர் அனல் மின்நிலையத்தில் புதிய பிரிவில் மின்னுற்பத்தி பாதிப்பு
 • 2017ம் ஆண்டு பிப்.,1-ல் மத்திய பட்ஜெட் தாக்கல்: அமைச்சரவை ஆலோசனை
 • பி.எட்., கல்லூரி சேர்க்கை செப்., 30 வரை அவகாசம். பி.எட்., கல்லுாரிகளில், மாணவர்களை சேர்க்க, கூடுதலாக, 10 நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலை கட்டுப்பாட்டில், ஏழு அரசு கல்லுாரிகள், 14 அரசு உதவிபெறும் கல்லுாரிகள் உள்ளன. மாணவர் சேர்க்கையை, செப்., 16ல் முடிக்க, தனியார் கல்லுாரிகளுக்கு, ஆசிரியர் கல்வியியல் பல்கலை உத்தரவிட்டது. ‘சேர்க்கையை திடீரென நிறுத்துவதால், பல ஆயிரம் இடங்கள் காலியாகும்’ என, கல்லுாரிகள் எதிர்ப்பு தெரிவித்தன. இதுகுறித்து, நமது நாளிதழில் செய்தி வெளியானது. உயர் கல்வி அதிகாரி கள் அவசர ஆலோசனை நடத்தி, தனியார் கல்லுாரிகளின் மாணவர் சேர்க்கைக்கு, வரும், 30ம் தேதி வரை கூடுதல் அவகாசம் அளித்துள்ளனர்.’செப்., 30க்கு பின், மாணவர்களை சேர்த்தால், அதற்கு அங்கீகாரம் கிடைக்காது’ என, பல்கலை பதிவாளர் தெரிவித்து உள்ளார்

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article