கோவிட்-19 தொற்றுநோய் கட்டுப்பாடுகள் “விரைவில்” முடிவடையும், என்று அமெரிக்க தேசிய ஒவ்வாமை மற்றும் தொற்று நோய் நிறுவன இயக்குனர் அந்தோனி ஃபாசி கூறியுள்ளார்.
“இந்த வைரஸை ஒழிக்க முடியும் என்று தான் நம்பவில்லை” என்றும் மாறாக அது “சமநிலையை” அடையும் என்றும் ஃபாசி விளக்கினார்.
“போதுமான மக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு ஏற்கனவே தொற்று நோயில் இருந்து மீண்ட பாதுகாப்பான மக்களையும் நாம் விரைவில் எதிர்பார்க்கிறோம். கோவிட் கட்டுப்பாடுகள் விரைவில் கடந்தகால விஷயமாக மாறும்” என்று ஃபாசி கூறினார்.
கட்டுப்பாடுகள் “விரைவில்” முடிவடையும் என்று நம்புவதாகவும், இந்த ஆண்டு அவை பெரும்பாலும் முடிவடையும் என்ற கருத்துக்கு உடன்படுவதாகவும் ஃபாசி தெரிவித்துள்ளார்.
ஓமிக்ரான் தொற்றுநோயின் கடினமான கட்டத்திலிருந்து அமெரிக்கா “நிச்சயமாக வெளியேறுகிறது” என்றும், “வைரஸை எவ்வாறு சமாளிப்பது என்பதில் மக்கள் தங்கள் சொந்த முடிவுகளை அப்போது எடுப்பார்கள்”
பிடென் நிர்வாகத்திற்குப் பதிலாக உள்ளூர் சுகாதாரத் துறைகள் வைரஸ் தொடர்பான முடிவுகளை எடுக்கும் என்றும் ஃபாசி கூறினார்.