கோவிட் -19 ஆய்வக கசிவு, வுஹான் ஆய்வகத்தில் இருந்து கசிவு போன்றவற்றால் வெளியேறியிருக்கலாம் என அமெரிக்க எரிசக்தி துறை,  தெரிவித்துள்ளது. ஏற்கனவே சீனாவில் இருந்துதான் கொரோனா எனப்படும் பேரழிவு வைரஸ் பரவியதாக அமெரிக்க உள்பட பல நாடுகள் குற்றம் சாட்டிய நிலையில், தற்போது மீண்டும் சீனாவை அமெரிக்கா குற்றம் சாட்டி உள்ளது.

கடந்த 2019ம் ஆண்டு இறுதியில்  சீனாவின் வுகான் மாகாணத்தில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் உலக நாடுகளில் பேரழிவை ஏற்படுத்தி உள்ளதுடன், உலக நாடுகளின் பொருளாதாரத்தையும் புரட்டிப்போட்டது. கடந்த  2020, 2021ம் ஆண்டுகளில் உலக மக்களை அச்சுறுத்தி வந்த கொரோனா வைரஸ் தொடற்று, கடந்த ஆண்டு இறுதியில் குறைந்த நிலையில், மக்கள் சற்று நிம்மதியடைந்து வருகின்றனர்.

இந்த நிலையில்,   அமெரிக்காவின் எரிசக்தி துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘சீனாவில் உள்ள ஆய்வகத்தில் இருந்து கோவிட்-19 வைரஸ் கசிந்திருக்கலாம் என தெரிவித்துள்ளது. அதாவது, உலகம் முழுவதும் மில்லியன் கணக்கான மக்களின் உயிரைப் பறித்துள்ள கொரோனா வைரஸ், சீனாவில் உள்ள ஆய்வகத்தில் இருந்து தோன்றியிருக்கலாம் என அமெரிக்க எரிசக்தி துறை புதிய அறிக்கையில் தெரிவித்துள்ளது.

முன்னதாக, வுஹான் ஆய்வகத்தில் இருந்து வைரஸின் சாத்தியமான கசிவு பற்றிய கோட்பாடுகள் உள்ளன, இருப்பினும், சீன அதிகாரிகள் அதை ஒருபோதும் உறுதிப்படுத்தவில்லை. இந்த நிலையில்,  கொரோனா வைரசின் தோற்றம் குறித்து பல்வேறு புலனாய்வு அமைப்புகள் நடத்திய விசாரணையின் அடிப்படையில்,. வுகான் ஆய்வகத்தில் இருந்து கசிந்துள்ளதாக தெரிவித்து உள்ளது.

ஏற்கனவே,  கடந்தாண்டு ஃபெடரல் பீரோ ஆஃப் இன்வெஸ்டிகேஷன் உட்பட பல ஏஜென்சிகளும், சீனாவின் ஆய்வகத்தில் இருந்து கொரோனா பரவியதை ஒப்புக்கொண்டன என்பது குறிப்பிடத்தக்கது