வாஷிங்டன்: நவம்பர் 3ம் தேதி நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலானது, நாட்டின் வரலாற்றிலேயே மிகவும் பாதுகாப்பானது என்று கூறியுள்ளனர்

அமெரிக்க பெடரல் மற்றும் மாகாண அதிகாரிகளின் கூட்டமைப்பு, நவம்பர் 3ம் தேதி நடைபெற்ற அதிபர் தேர்தலில் வாக்குப்பதிவில் எந்தவித முறைகேடுகளோ, மோசடிகளோ நடைபெற்றதாக தங்களால் கண்டறிய முடியவில்லை என்று கூறியுள்ளது.

மேலும், தற்போதைய அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் அவரின் ஆதரவாளர்கள் பலரால் தேர்தல் தொடர்பாக முன்வைக்கப்படும் மோசடி குற்றச்சாட்டுகளை அவர்கள் நிராகரித்தனர்.

“அமெரிக்க நாட்டில் நடத்தப்படும் தேர்தலுடைய மாண்பை குறைக்கும் வகையில், அந்த நடைமுறைகள் தொடர்பாக பலவிதமான குற்றச்சாட்டுகள் முவைக்கப்படுகின்றன. ஆனால், நமது தேர்தல் முறையின் நம்பகத்தன்மை மற்றும் பாதுகாப்பின் மீது நாங்கள் பெரியளவில் நம்பிக்கை வைத்துள்ளோம் என்பதை உறுதிப்படுத்த விரும்புகிறோம்.

எனவே, அந்த நம்பிக்கையை நீங்களும், நமது தேர்தல் முறையின் மீது வைக்க வேண்டும். உங்களுக்கு சந்தேகம் இருந்தால், தேர்தல் அதிகாரிகளை அணுகி விளக்கம் பெற்றுக் கொள்ளலாம்” என்று அந்த அதிகாரிகளின் கூட்டமைப்பு கூறியுள்ளது.