நியூயார்க்:

மெரிக்க அதிபர் ஜோ பைடனின் 1.09 லட்சம் கோடி அமெரிக்க டாலர் கொரோனா நிவாரண நிதியை அமல்படுத்தினால் 2022 ஆம் ஆண்டில் அமெரிக்கா முழுமையாக முந்தைய நிலைக்கு திரும்பும் என அமெரிக்காவின் கருவூல செயலாளர் ஜேனட் எல்லன் நேற்று தெரிவித்துள்ளார்.

இந்த கொரோனா நிவாரண தொகுப்பு நிறைவேற்றப்பட்டு விட்டால் நாங்கள் 2022 ஆம் ஆண்டு முழுமையாக இயல்பு நிலைக்கு திரும்பிவிடுவோம், கடந்த வருடம் டிசம்பர் மாதத்தில் 2,27,000 பேரின் வேலைகளை குறைத்து, கடந்த ஜனவரி மாதத்தில் 49,000 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கியுள்ளோம். தற்போது அதிபர் ஜோ பைடனின் நிவாரணநிதி செயல்படுத்தப்பட்டால் 2022 ஆம் ஆண்டுக்குள் இயல்பு நிலைக்கு திரும்பி விடுவோம் என ஜேனட் எல்லன் தெரிவித்துள்ளார்.