வாஷிங்டன்,

மெரிக்க முப்படைகளின் தலைமை தளபதி ஜோசப் டென் போர்டின் பதவி  மேலும் 2 ஆண்டு காலம் நீடித்து அமெரிக்க செனட் சபை ஒப்புதல் வழங்கி உள்ளது.

அமெரிக்க கடற்படையின் கற்படை  பிரிவின் தளபதியாக இருந்த ஜோசப் டன்ஃபோர்ட். இவரது பணி திறமை காரணமாக  2015ம் ஆண்டு ஒபாமாக அரசு  முப்படைகளின் தலைமை தளபதி அவரை நியமித்தது.

அவரது பதவி காலம் இந்த ஆண்டுடன் முடிவடைய இருந்தது. இந்நிலையில், மேலும் இரண்டு ஆண்டு காலம் அந்தப் பொறுப்பில் தொடர்வார் என்று சமீபத்தில் அதிபர் டிரம்ப் கூறியிருந்தார்.

இந்நிலையில்,  டன்ஃபோர்டின் பதவி நீட்டிப்பு தொடர்பான தீர்மானம் நாடாளுமன்றத்தின் மேலவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.