சென்னை:

பாராளுமன்ற தேர்தலுக்கான அதிமுக தேர்தல் அறிக்கை  ராயபேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி உள்பட அதிமுக மூத்த தலைவர்கள் முன்னிலையில்,   வெளியிடப்பட்டது.

அதில்,

மாணவர்களின் கல்வி கடன்களை முழுவதுமாக ரத்து செய்ய மத்திய அரசை வலியுறுத்துவோம்

நீட் தேர்வை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

கல்வியை பொதுப்பட்டியலில் இருந்து மாநில பட்டியலுக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்

விவசாய கடன் சுமையை நீக்கும் வகையில் புதிய திட்டம்

தாழ்த்தப்பட்ட மலைவாழ் மக்களுக்கு தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்புக்கு இட ஒதுக்கீடு

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்க மத்திய அரசையும், குடியரசு தலைவரையும் வலியுறுத்துவோம்

புதுச்சேரிக்கு முழு மாநில அந்தஸ்து வழங்க மத்திய அரசை வலியுறுத்துவோம்

அதிமுக காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வலியுறுத்துவோம்

தமிழ்மொழியை மத்திய அரசு அலுவலகங்களில் அலுவல்மொழியாக்க நடவடிக்கை

காவிரி, கோதாவரி இணைப்பு திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற மத்திய அரசை வலியுறுத்துவோம்

வீணாகும் தண்ணீரை பாசனம் மற்றும் குடிநீர் தேவைகளுக்கு பயன்படுத்த புதிய திட்டம்