சென்னை: நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் தேமுதிக இன்று முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது.
தமிழ்நாட்டிலுள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகளுக்கு ஒரே கட்டமாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது. இதன்படி, வரும் பிப்ரவரி 19-ம் தேதி தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்த தேர்தலை தொடர்ந்து, அனைத்து கட்சிகளும் கூட்டணியில் போட்டி யிடக்கூடிய கூட்டணி கட்சிகளுக்கான இட பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் ஏற்கனவே தொடங்கிய நிலையில், வருகின்ற 4-ஆம் தேதி நிறைவு பெறுகிறது. இதையொட்டி அரசியல் கட்சிகள் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டு வருகிறது.
இந்த நிலையில், தேர்தலில் தனித்து போட்டியிடும் தேமுதிக இன்று முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு உள்ளது. இதில், திருப்பூர் மாநகராட்சியில் 24 வார்டுகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.