சென்னை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மநீம கட்சியின் தலைவர் கமல்ஹாசன்  3வது வேட்பாளர்கள் பட்டியலை இன்று வெளியிட்டார்.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை ஒரே கட்டமாக பிப்ரவரி மாதம் 19ம் தேதி நடைபெறுகிறது. அதையடுத்து, வேட்புமனு தாக்கல் : ஜனவரி 28ந்தேதி தொடங்கி பிப்ரவரி 4ந்தேதி வரை நடைபெறுகிறது. பிப்ரவரி 5ந்தேதி வேட்பு மனு பரிசீலனையும், பிப்ரவரி 7ந்தேதி வேட்புமனு வாபஸ் பெறும் நாள் என அறிவிக்கப்பட்டு உள்ளது. அதையடுத்து பிப்ரவரி 19ந்தேதிவ க்குப்பதிவு நடைபெற்று பிப்ரவரி 22ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் அறிவித்துள்ளார்.

இதையடுத்து அரசியல் கட்சிகள் வேட்பாளர்களின் பட்டியலை வெளியிட்டு வருகிறது. கமல்ஹாசனின்  மக்கள் நீதி மய்யம் கட்சி இந்த தேர்தலில் தனித்தே போட்டியிடுவதாக அறிவித்துள்ளதுடன் ஏற்கனவே 2 கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டு உள்ளது.

இதையடுத்து, இன்று 3வது கட்ட வேட்பாளர்கள் பட்டியலை கமல்ஹாசன் வெளியிட்டு உள்ளார். அத்துடன் பதிவிட்டுள்ள டிவிட்டில்,  நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பாகப் போட்டியிட இருக்கும் வேட்பாளர்களின் மூன்றாவது பட்டியலை மகிழ்ச்சியுடன் வெளியிடுகிறேன். நேர்மையும், திறமையும், தூய்மையும் கொண்ட இவர்களை வெற்றி பெறச் செய்யுங்கள் என்று பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.