சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு பூத் சிலிப் வினியோகம் வருகிற 12-ந்தேதி முதல் தொடங்கும் என மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பு மனுதாக்கல் முடிவடைந்து இறுதி வேட்பாளர்கள் பட்டியலும் வெளியாகி உள்ளது. வரும் 19ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால், தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது. இந்தநிலையில், பூத் சிலிப் விநியோகம் செய்வது குறித்து மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
அதன்படி, பூத் சிலிப் வழங்கும் பணி வருகிற 12-ந்தேதி முதல் தொடங்குவதாக, மாநில தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது. மேலும், அன்று முதல் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் வீடுகளுக்கே சென்று பூத் சிலிப் வழங்கப்படும் என்றும், பூத் சிலிப் வாங்காமல் விடுபட்டவர்களுக்கு ஓட்டுப்பதிவு நடைபெறும் நாளில் வாக்குச்சாவடிக்கு அருகே பூத் சிலிப் வினியோகம் செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.