சென்னை: பொதுத்தேர்வு எழுதவுள்ள 10 மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்களின் முழு விவரங்களை பதிவேற்றம் செய்ய பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டு உள்ளது.
கொரோனா தொற்று பரவல் குறைந்ததும், தமிழகத்தில் பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டு உள்ளன. முதலில் 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான வகுப்புகள் திறக்கப்பட்டு பாடம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், பொதுத்தேர்வு எழுதவுள்ள 10 மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்களின் முழு விவரங்களையும் பதிவேற்றம் செய்ய வேண்டும் என அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.
அத்துடன், மாணாக்கர்களின் மதம், சாதி உட்பட 12 வகையான விவரங்களை பதிவேற்றம் செய்யப்பட வேண்டும் என்றும், இவை அனைத்தும், நவம்பர் 22ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 4 ஆம் தேதிக்குள் பணிகளை முடிக்க ஆணையிடப்பட்டுள்ளது.