சென்னையில் பெட்ரோல் ரூ. 77.13க்கும், டீசல் ரூ. 69.59க்கும் விற்பனை

Must read

சென்னையில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.77.13 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.69.59 காசுகளாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் 24 மணி நேரத்திற்கு ஒருமுறை மாற்றம் ஏற்படுத்தி, அறிவிப்புகளை எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டு வருகின்றன. எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணையிக்கும் விலையிலேயே பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனையும் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இன்றைய விலை நிர்ணையம் தொடர்பாக எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “சென்னையில் நேற்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை விலையில், இன்று எவ்வித மாற்றமும் இல்லை. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.77.13 ஆகவும், டீசல் விலை ரூ.69.59 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை முதல் அமலுக்கு வந்தது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

More articles

Latest article