சென்னை:
உத்தரப்பிரதேச வன்முறையைக் கண்டித்து நாளை காங்கிரஸ் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது.

இதுகுறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில், உத்தரப்பிரதேச வன்முறையைக் கண்டித்து நாளை நாடு முழுவதும் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகங்கள் முன்பாக மாவட்ட காங்கிரஸ் குழுக்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டுமெனக் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
அதன்படி தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட காங்கிரஸ் குழுக்களும் நாளை மாவட்ட ஆட்சித் தலைவர்கள் அலுவலகங்கள் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்த வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
Patrikai.com official YouTube Channel