உத்தர பிரதேச மாநிலம் மீரட் நகரில் நடைபெற்ற மத கூட்டம் ஒன்றில் நெரிசல் ஏற்பட்டதை அடுத்து கூட்டத்திற்கு வந்த பெண்கள் உள்ளிட்ட பலருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.
பண்டிட் பிரதீப் மிஸ்ரா என்பவர் கலந்துகொண்ட இந்த கூட்டத்தில் அவரது கதையை கேட்க பெண்கள் திரண்டு வந்ததால் அங்கு நெரிசல் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்த களேபரத்தில் நான்கு பெண்கள் மிதிப்பட்டதாகவும் அவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டதை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை என்று காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
[youtube-feed feed=1]