டில்லி

டுத்த ஆண்டு நடைபெற உள்ள உத்தரப் பிரதேச மாநிலத் தேர்தலில் பாஜகவுக்கு எதிராகப் பிரச்சாரம் செய்ய விவசாயிகள் முடிவு செய்துள்ளனர்.

பாஜக அரசு கொண்டு வந்துள்ள 3 புதிய வேளாண் சட்டங்களுக்கு விவசாயிகள் தொடர்ந்து எதிர்பு தெரிவித்து வருகின்றனர். டில்லி எல்லைகளில் பஞ்சாப் மற்றும் அரியானா மாநில விவசாயிகள் தொடர் போராட்டம் நிகழ்த்துகின்றனர்.  இந்த வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற மத்திய அரசு மறுத்து வருவதால் இந்த போராட்டம் ஒரு முடிவுக்கு வராமல் உள்ளது.

இது குறித்து  உத்தர பிரதேச மாநிலம் முசாபர் நகரில் பிரம்மாண்ட பொதுக் கூட்டத்தை விவசாய அமைப்பினர் நடத்தினர். இக் கூட்டத்தில், பாரத் கிஸான் யூனியன் செய்தித் தொடர்பாளர் ராகேஷ் டிகைத் உள்ளிட்ட பல்வேறு விவசாய சங்க தலைவர்கள் கலந்துகொண்டனர்.

அடுத்த ஆண்டு உத்தரப் பிரதேசத்தில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் பாஜகவுக்கு எதிரான போராட்டத்தையும், பிரச்சாரத்தையும் முன்னெடுக்க வேண்டும் என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் வரும் 27-ம் தேதி அகில இந்திய அளவில் வேலைநிறுத்த போராட்டத்தையும் நடத்தத் திட்டமிட்டுள்ளனர்

இந்த கூட்டத்தில் பாரத் கிஸான் யூனியன் (பிகேயு) செய்தித் தொடர்பாளர் ராகேஷ் டிகைத் பேசும்போது, ‘‘விவசாயிகளுக்கு எதிரான இந்த புதிய சட்டங்களை வாபஸ் பெறவேண்டும் என்று நாம் நியாயமாக போராடி வருகிறோம். விவசாயிகள், தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் நிம்மதியாக வாழ வழிவகை செய்ய வேண்டும்’’ என்றார்.