போபால்

உத்தரப்பிரதேச முன்னாள் ஆளுநரும் முத்த காங்கிரஸ் தலைவருமான அஜிஸ் குரேஷி மரணம் அடைந்துள்ளார்.

நீண்டகாலமாக உள்ள உடல்நலக் குறைவால் உத்தரப் பிரதேச மாநிலத்தின் முன்னாள் ஆளுநரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான அஜிஸ் குரேஷி (வயது 83) இன்று காலமானார். இவர் கடந்த சில காலமாக உடல்நிலை சரியில்லாமல் இருந்த அவர், போபாலில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

சிகிச்சை பலனின்றி இன்று காலை 11 மணியளவில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். அஜீஸ் குரேஷி உத்தரகாண்ட், உத்தரப்பிரதேசம் மற்றும் மிசோரம் ஆகிய மாநிலங்களின் ஆளுநராகப் பதவி வகித்தவர் ஆவார்.

முதன்முதலில் அவர் 1972ம் ஆண்டில் மத்தியப் பிரதேசத்தின் செஹோர் தொகுதியில் இருந்து சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார், கடந்த 1984 இல் அஜிஸ் குரேஷி மக்களவை உறுப்பினரானார். அரசியல் தலைவர்கள் பலரும் இவரது மரணத்துக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

U P, Ex governor, Aziz quereshi, died