லக்னோ:

உ.பி. மாநிலத்தில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் பல் மருத்துவ கல்லூரிகளில் எஸ்சி,எஸ்டி, ஒபிசி பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டை முதல்வர் ஆதித்யநாத் யோகி ரத்து செய்துள்ளார்.

மாநிலத்தில் ஊழலை ஒழிக்க ஆதித்யாநாத் முதல்வராக பதவி ஏற்றது முதல் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இந்த வகையில் கல்வி துறையிலும் தற்போது ஒரு அதிரடியை புகுத்தியுள்ளார்.

அரசுப் பள்ளிகளில் நர்சரி முதல் ஆங்கிலத்தை அறிமுகம் செய்ய முடிவு செய்துள்ளார். தற்போது அங்கு 6ம் வகுப்பு முதல் ஆங்கிலம் உள்ளது. தேசியவாதத்தையும் கலந்து நவீன பாடத்திட்டத்தை கொண்டு வர திட்டமிட்டுள்ளார்.

பாரம்பரியமும் நவீனமும் இணைந்திருக்க வேண்டும். நவீன பாடத்திட்டத்தை கொண்ட தேசிய வாதத்தை போதிக்கும் கல்வி முறை கொண்டு வரப்படும் என்று ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். அடுத்தபடியாக அனைத்து அரசுப் பள்ளிகளிலும் யோகா கல்வி திட்டம் கட்டாயம் கொண்டு வர அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தியுள்ளார்.

அதேபோல் மாணவிகளுக்கு தற்காப்பு பயிற்சி அளிக்கவும் உத்தரவிட்டுள்ளார். உ.பி. மாநிலத்தில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் பல் மருத்துவ கல்லூரிகளில் எஸ்சி,எஸ்டி, ஒபிசி பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டை முதல்வர் ஆதித்யநாத் யோகி ரத்து செய்துள்ளார்

அரசுப் பள்ளி மாணவ மாணவிகள் குறைந்தபட்சம் ஒரு வெளிநாட்டு மொழியை கற்க வேண்டும் என்று பாஜ அரசு முடிவு செய்துள்ளது. தேசப் பற்று, தேசியவாதம், கலாச்சாரம் இணைந்த பாடத்திட்டங்களை பள்ளிகளில் உருவாக்க வேண்டும் என்று சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.